கிரண்ஃபோஸ் இந்தியா IE5 மோட்டார்

கிரண்ஃபோஸ் இந்தியா IE5 மோட்டார்
Grundfos India Launches IE5 Motor

கிரண்ஃபோஸ் இந்தியா IE5 மோட்டார் பொருத்தப்பட்ட அதிக-திறன்மிக்க ஹைட்ரோ MPC பம்ப்புகளை அறிமுகப்படுத்துகிறது

சென்னை: மின்சக்தியை - சேமித்திடும் பம்ப்புகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கிரண்ஃபோஸ் இந்தியா IE5 மோட்டார் பொருத்தப்பட்ட அதிக-திறன்மிக்க ஹைட்ரோ MPC பம்ப்புகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்தது. கிரண்ஃபோஸ் ஹைட்ரோ MPC பூஸ்டர் அமைப்புகள் மிகவும் உயர்ந்த தரத்திலானவை மேலும் இதை IE5 மோட்டாருடன் சேர்ப்பது என்பது ஒரு ஃப்ரீக்வென்ஸி கன்வெர்டருடன் ஒருங்கிணைப்பதன் மூலமாக செய்யப்படுகிறது. இது கிரண்ஃபோஸின் ஒன்றுதிரட்டப்பட்ட பம்ப் அனுபவத்தை அதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மென்பொருளுடன் இணைக்கிறது. பம்ப் மற்றும் தனிப்பயனாக்கக்கூடிய மென்பெருள் ஆகியவற்றின் கூட்டணி எத்தகைய தேவைகளையும் சமாளிக்கக்கூடிய உங்களது சாதனத்தின் செயல்திறனை அதிகரித்திடும், அதன்மூலமாக மின்சாரப் பயன்பாட்டினை எப்போதுமில்லாத அளவுக்கு சேமித்திடும். தொழில்துறை முன்னோடி என்கின்ற முறையில், கிரண்ஃபோஸ் IE5 மோட்டாரை அறிமுகப்படுத்துவதில் உற்சாகம் அடைகிறது. இது 7 சதவிகிதம் வரை மின்சாரத்தை சேமிக்க உதவுகிறது மேலும் இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட பம்ப்புகளின் திருப்பிச்செலுத்தும் காலத்தையும் குறைக்கிறது.

கிரண்ஃபோஸ் ஹைட்ரோ MPC பூஸ்டர் அமைப்புகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன மேலும் அவை உறுதியானவையாகும். இந்த கச்சிதமான சாதனம் அதன் அனைத்து பாகங்களுக்கும் சேவை செய்வதையும் மிகவும் எளிதாக்குகிறது. எங்கெல்லாம் கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கிரண்ஃபோஸ் ஹைட்ரோ MPC பூஸ்டர் சாதனங்களைப் பயன்படுத்தலாம். சில முக்கியமான குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் யாதெனில்:

* நம்பகமான அதிக செயல்திறன் மிக்கது

* அதிக செயல்திறன் மிக்கது

* சர்விஸ் செய்வது மிகவும் எளிமையானது

* இடத்தை மிச்சப்படுத்துவது

* நிறுவுவது எளிமையானது

* நீரோட்டத்திற்கு ஏற்ப சிறந்த முறையில் செயல்படும்

* குறைவான நீரோட்டம் இருந்தால் அதைக் கண்டறியும் 

* பயன்பாட்டிற்கு -பொருத்தமாக அமைக்கப்பட்ட மென்பொருள்

முன்பு எப்போதும் இல்லாத செயல்திறனுக்கு உறுதியளிக்கப்படும் இந்த ஹைட்ரோ MPC மோட்டார் அதன் அதிநவீன புத்திசாலித்தனம்மிக்க பாகங்களால் ஈடு இணையற்றதாக திகழ்கிறது. IE5 மோட்டார்களுடன் கூடிய ஹைட்ரோ MPC பம்ப்புகள் பல்வேறு பம்ப்பு அளவுகளில் தண்ணீரை சிறப்பாக வெளிக்கொண்டுவரும் வகையில் தொழிற்சாலையில் முன்பே - கட்டமைக்கப்பட்ட வடிவில் கிடைக்கிறது.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரித்த கிரண்ஃபோஸ் இந்தியாவின் விற்பனைகள் (தென்னிந்தியா) பிரிவு துணைத் தலைவர் ஜி. கங்கா பிரசாத் அவர்கள், “ஒவ்வொரு சிறப்பாக செயல்படும் கட்டிடத்திலும் ஒரு சிறப்பாக செயல்படும் பம்ப் உள்ளது. ஆனால் பம்ப்புகள் இதில் ஒரு பகுதி மட்டும்தான். புத்திசாலித்தனம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வுகள் இன்னும் மேம்பட்ட செயல்திறன்மிக்க கட்டிடத்தை உருவாக்க,  உங்களது முழு அமைப்பினையும் உங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. புத்திசாலித்தமான பம்ப்புகள், வடிவமைப்பு மற்றும் உயர் செயல்திறன், IE5 மோட்டார்கள் ஆகியவற்றின் மூலமாக இந்த பணியைச் செய்யத்தான் கிரண்ஃபோஸ் முயற்சிக்கிறது,” என்றார்.

IE5 மோட்டாருடன் கூடிய ஹைட்ரோ MPC  பம்ப் செப்டம்பர் 22 மற்றும் 23, 2017 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் 23வது இந்திய பிளம்பிங் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதன் ஹைட்ரோ MPC  மற்றும் IE5 மோட்டார் மட்டுமின்றி ஒரு பிரத்யேகமான காட்சிப்பிரிவில் தனது இதர அதிக செயல்திறன் மிக்க மற்றும் புத்திசாலித்தனம் மிக்க பம்ப்புகளான மேக்னா ஐஸ் டெமோ, போன்றவற்றையும் SE/SL, SEG, DPK.V, SCALA2, ஸ்மார்ட் சோலார்ஸ் மற்றும் சோலோலிஃப்ட் போன்ற தண்ணீரை அகற்றும் மற்றும் கழிவுகளை அகற்றும் பம்ப்பு வகைகளையும் கிரண்ஃபோஸ் காட்சிக்கு வைக்கிறது. நீங்கள் கிரண்ஃபோஸ் காட்சிப்பிரிவினை சென்னை வர்த்தக மையம் - ஸ்டால் எண் 27 இல் பார்க்கலாம்.

Grundfos India Launches IE5 Motor