கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்

கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
Great Improvement in DMK Leader Karunanidhi health

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு கருணாநிதி உடல் நிலையில் மேலும் முன்னேற்றமாக அவர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். முதலில் டாக்டர்கள் அவரை படுக்கையில் சிறிது நேரம் அமரவைத்தனர். அதன் பிறகு அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து சிறிது நேரம் பயிற்சிகள் அளித்தனர்.

இதுபற்றி ஆஸ்பத்திரி வட்டாரத்தில் கூறும் போது, கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவரை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளித்தனர். மருந்துகளை ஏற்றுக் கொண்டு உடல் நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

கருணாநிதி செயற்கை சுவாசம் இல்லாமல் தானாகவே சுவாசிக்கிறார். தேவைப்படும் போது மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. திரவ உணவு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

Great Improvement in DMK Leader Karunanidhi health