இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நகைச்சுவை தொடரில் தவிர்க்கமுடியாத வேடிக்கையான நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க தயாராகுங்கள்
இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்
கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நகைச்சுவை தொடரில்
தவிர்க்கமுடியாத வேடிக்கையான நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்க தயாராகுங்கள்
~ ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021 அன்று மாலை 7 மணிக்கு கலர்ஸ் தமிழை டியூன் செய்யுங்கள்; ஜல்சா மன்னர் மற்றும் சிறப்பு விருந்தினர் நடிகை ஜனனி அய்யரை சந்தியுங்கள்
சென்னை, ஆக.20: மிகவும் பிரபலமான நகைச்சுவை தொடரான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021 அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இதில் நையாண்டியை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. மன்னர் ஜல்சா மற்றும் அவரது குடிமக்களின் தீவில் ஒளிபரப்பாகும் பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மாதிரியை நகைச்சுவையுடன் இந்த வார நிகழ்ச்சி வழங்க உள்ளது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் மன்னர் ஜல்சாவாக ரோபோ சங்கர், ராஜமாதாவாக நடிகை ஷகீலா மற்றும் பேபி மாதாவாக ஜாங்கிரி மதுமிதா நடித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை சிறப்பு ஸ்பான்சரான டக்கர் மசாலா தொகுத்து வழங்குகிறது. இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜனனி அய்யர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உறுதி.
'ஜல்சாவின் டிவி' என்ற தலைப்பில், நையாண்டி நிகழ்ச்சி நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, இதில் மிதமான நகைச்சுவை, துடிப்பான நிகழ்ச்சிகள், ஜல்சா மன்னர் மற்றும் விருந்தினர் நடிகை ஜனனி அய்யர் ஆகியோருக்கு இடையேயான வேடிக்கை மற்றும் வினோதம் நிறைந்த உரையாடல் மற்றும் அமுதவாணனின் விலாநோகச் செய்யும் சிரிப்பு நிகழ்ச்சி போன்றவை இடம்பெற உள்ளன.
இது குறித்து நடிகை ஜனனி அய்யர் கூறுகையில், கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 ஆனந்த அனுபவமிக்க நிகழ்ச்சியாகும். மன்னர் ஜல்சா மற்றும் தீவில் வசிப்பவர்களுடன் சந்திப்பானது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கலகலப்பாகவும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பார்வையாளர்கள் எங்கள் நிகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நான் எப்போதுமே ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க விரும்பினேன். கன்னித் தீவுடன் எனது நகைச்சுவையை வெளிக்கொணரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, இது உண்மையிலேயே ஒரு வகையான சிறப்பான நிகழ்ச்சி ஆகும். வாய்ப்பளித்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 என்னும் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் மிக சமீபத்தில் துவங்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியாகும், இது மன்னர் ஜல்சானந்தாவின் கதையையும் அவரது காஸ்ட்வே தீவில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் பற்றியதாகும். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மற்றதை விட வேடிக்கையானது. இதில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருடன், பிரபல தொலைக்காட்சி கலைஞரும் நடிகையுமான மதுமிதா பேபி மாதாவாக வேடிக்கையான புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்களுடன் புகழ்பெற்ற நடிகை ஷகீலா, ராஜமாதாவாக நடித்திருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நகைச்சுவை கிளப்பில் ராஜகுருவாக திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காரா (அண்ணா பாரதி நடித்திருக்கிறார்), மாதா ஜால்ரா (நர்மதா நடித்துள்ளார்), அடவாடி அன்சார், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாகவும் மற்றும் கலையரசன் (அமுதவாணன் நடித்துள்ளார்) மற்றும் அவரது குழுவினர் பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோரும் பார்வையாளர்களை மகிழ்விக்கிறார்கள்.