ஜெம் & ஜுவெல்லரி: இந்தியா பன்னாட்டு பொருட்காட்சி

ஜெம் & ஜுவெல்லரி: இந்தியா பன்னாட்டு பொருட்காட்சி

சென்னை: 2018 மார்ச் 23: மதராஸ் ஜுவெல்லர்ஸ் வைர வியாபாரிகள் சங்கம் (எம்ஜெடிஎம்ஏ) மற்றும் இந்தியாவின் முன்னணி பொருட்காட்சி நிறுவனமான யுபிஎம் இந்தியா ஏற்பாடு செய்திருந்த ஜெம் & ஜுவெல்லரி இந்தியா பன்னாட்டு பொருட்காட்சி (ஜிஜெஐஐஇ) 2018 இன்று சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது.

முதன்மை விருந்தினராக சுஹாசினி மணிரத்தினம், எம்ஜெடிஎம்ஏ தலைவர் ஜெயந்திலால் சலானி, எம்ஜெடிஎம்ஏ – ஜிஜெஐஐஇ தலைவர் ராஜேஷ் உம்மிடி, யுபிஎம் இந்தியா மேலாண் இயக்குனர் குழு இயக்குனர் அப்ஜீத் முகர்ஜீ ஆகியோர் பெரும் திரளாக கூடியிருந்த தொழிற்துறையினர் முன்னிலையில் பொருட்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

ஜுவெல்லரி துறையின் ஒருங்கிணைந்த அங்கமாகச் சங்கங்கள் மற்றும் துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தப் பொருட்காட்சி முன்னணி சங்கமான எம்ஜெடிஎம்ஏ உள்பட 310 வர்த்தகச் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளது. 325 நிறுவனங்கள் & 450 பிராண்ட்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், இறக்குமதி & ஏற்றுமதியாளர்கள், ஜுவெல்லரி தயாரிப்பாளர்கள், எந்திரவியல் தயாரிப்பாளர்கள், வைரம், ஜெம்ஸ்டோன், முத்து வழங்குவோர் & வணிகர்கள், விலை உயர்ந்த உலோக & ஜுவெல்லரி வணிகர்கள், அரசு அமைப்புகள் ஆகியோரின் பங்கேற்புடனும், சமீபத்திய நவீனங்களின் அறிமுகத்துடனும் நடைபெறும் 3 நாள் பொருட்காட்சி தென் இந்தியாவின் மிகப் பெரிய 2பி2 பொருட்காட்சியாகும்.

இந்திய ஜுவெல்லரி சந்தைக்கான நுழைவு வாயிலாக இருக்கும் ஜிஜெஐஐஇ தென் இந்தியக் கலெக்ஷனில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் விற்பனை செய்வோருக்கும், வாங்குவோருக்கும், வழங்குவோருக்கும் வணிக வாய்ப்புகளை உருவாக்கவும், நவின போக்குகளைக் கண்டுபிடிக்கவும், புதிய எண்ணங்களையும், சிந்தனைகளையும் பரிமாறிக் கொள்ளவும், வலைப்பணி மூலம் இணையவும், தளம் அமைத்துத் தருகிறது. நிரூபிக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான ஆதார மையமாக விளங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், பிரபல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது. மேலும் இந்தியாவிலுள்ள 1, 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்களுடன், மலேஷியா, சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளும் இப்பொருட்காட்சியில் பங்கேற்பது 2018 ஜிஜெஐஐஇயின் பன்னாட்டு தரத்துக்குச் சான்றாகும்.

தென் இந்தியாவின் மிகப் பெரிய ஜுவெல்லரி பொருட்காட்சியான ஜிஜெஐஐஇ 2018 தொடக்க விழாவில் பங்கேற்றுப் பேசிய யுபிஎம் இந்தியா மேலாண் இயக்குனர் யோகேஷ் முத்ராஸ் பேசுகையில் ‘ஏற்றுமதி சார்ந்த, கடுமையான உழைப்பு தேவைப்படும் ஜெம் மற்றும் ஜுவெல்லரி துறையில் மகத்தான வாய்ப்புகள் இருப்பதால் உலக ஜுவெல்லரி சந்தையின் மையமாக இந்தியா விளங்குகிறது. ஒரே தளத்தில் துறை சார்ந்த சவால்களைச் சமாளிக்கவும், முக்கியத் திட்டங்களை உருவாக்கவும், வளர்ச்சி மற்றும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கவும், வர்த்தகத்தை ஒருங்கிணைக்கவும் தளமாகத் திகழ்கிறது. தென் இந்தியாவின் மிகப் பெரிய ஜுவெல்லரி பொருட்காட்சியான ஜிஜெஐஐஇ ஜுவெல்லரி தொழில்முறை நிபுணர்களுக்கு நுண் வலைப்பணியை உருவாக்கவும், ஜுவெல்லரி, வைரம், முத்து, ஜெம் ஸ்டோன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விற்போர், வாங்குவோர், வழங்குவோர் ஆகியோரை ஒருங்கிணைக்கவும், இணைந்து செயல்படவும், சர்வதேச அளவில் வாய்ப்புகளை அமைத்துத் தருவதில் பெருமை கொள்கிறது’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில் ‘2017 மார்ச் கடந்த எடிஷனில் எங்களுக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து ஜிஜெஐஇ 14ஆவது எடிஷன் மிகப் பெரிய வணிக வாய்ப்புகளுடன் இன்னும் பெரிய பொருட்காட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். எங்களது முனைவுகளுக்கு உண்மையான மற்றும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய தெற்கில் உள்ள அனைத்து ஜுவெல்லரி சங்கங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்’ என்றார்.

டெம்பிள் நக்ஷி ஜுவெல்லரி, ஸ்டோன் ஸ்டட்டெட் ஜுவெல்லரி, மாங்கா மாலை, காசு மாலை, பாச்சி வடிவமைப்பு உள்ளிட்ட பிரைடல் ஜுவெல்லரி ஆகியவை சமகால நவீனத்துடன் இந்த ஆண்டு பொருட்காட்சியில் இடம் பெறும் பாரம்பரிய ஜுவெல்லரிகள் ஆகும். சிஎஸ் ஜுவெல்லரி, கேஸ்டிங்க் ஜுவெல்லரி, ஹாலோ செயின்ஸ், பிரத்யேக மென்ஸ் ஜுவெல்லரி, முத்து, பல்லடுக்கு கொண்ட நெக் பீஸ், ஆர்ம் கஃப், பீஜுவெல்ட் ப்ரூச்செஸ் உள்ளிட்ட சீசனல் ட்ரெண்டிங்க் ஜுவெல்லரிக்களுடன், நவீன எந்திரங்கள், அவற்றின் தயாரிப்பு முறை மற்றும் தொடர்பான பொருள்கள் மற்றும் சேவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

சென்னை, கோவை, பெங்களூர், கேரளம், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், ஜெய்பூர், தில்லி ஆகிய நகரங்கள் பொருட்காட்சியில் பங்கேற்கின்றன. எமரல்ட் ஜுவெல்

இண்டஸ்ட்ரி, லக்ஷ்மி ஜுவெல்லரி, ஜெய் குலாப் தேவ் ஜுவெல்லர்ஸ், பிரகாஷ் கோல்ட் பேலஸ், மோகன்லால் ஜுவெல்லர்ஸ், ஜெ சி ஜுவெல்லர்ஸ், ஆர்கேஆர் கோல்ட், ராசி ஜுவெல்லரி, வொயிட் ஃபையர் டயமண்ட்ஸ், பீயர் மேனுஃபாக்சரர்ஸ், ஏஞ்சல் கோல்ட், எமி எக்ஸ்போர்ட்ஸ், முக்தி கோல்ட், செயின் என் செயின்ஸ், ஸ்வாம் ஷில்பி செயின்ஸ், யுனீக் செயின்ஸ், சங்கம் ஜுவெல்ஸ், சாந்தி கோல்ட் இண்டர்நேஷனல், மடுஸ்ரீ கோல்ட், அன்மோல் ஸ்வர்ன், ஜார் ஜுவெல்ஸ், லோடஸ் ஜுவெல்லரி, சார்புஜா ஜுவெல்ஸ், அம்பிகா ஜுவெல்ஸ், மனக் ஜுவெல்லர்ஸ், ஜெ கே எஸ் ஜுவெல்ஸ், தமார