குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் காம்பீர்

கொல்கத்தா: சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலபதர் என்னும் இடத்தில் கடந்த திங்கள் கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர் மீது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 25 சி.ஆர்.பி.எப் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்ட 25 சி.ஆர்.பி.எப் வீரர்களில் குழந்தைகளுக்கு ஆகும் கல்வி செலவை தனது அறக்கட்டளை ஏற்கும் என கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளார்.