இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் ‘கேலக்சி’ சாக்லேட்: மார்ஸ் ரிக்லி அறிமுகம்
இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
‘கேலக்சி’ சாக்லேட்: மார்ஸ் ரிக்லி அறிமுகம்
--------
ரூ.10, ரூ.20 விலையில் 2 வித சுவையில் வருகிறது
----------
கோவை, மதுரை, நவ.9-
இந்தியாவில் தனது வெற்றிகரமான பயணத்தின் தொடர்ச்சியாக, உலக அளவில் சாக்லேட், சூயிங் கம், மின்ட் மற்றும் பழங்களின் சுவைகளைக் கொண்ட மிட்டாய்கள் மற்றும் எம்அன்ட்எம், ஸ்னிக்கர்ஸ், ஆர்பிட் மற்றும் ஸ்கிட்டில்ஸ் போன்ற சாக்லேட்களை தயாரித்து விற்பனை செய்துவரும் புகழ்பெற்ற நிறுவனமான மார்ஸ் ரிக்லி நிறுவனம் இந்தியர்களுக்காக இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்வதற்காக கேலக்சி என்னும் புதிய பிராண்டில் 2 வித சுவைகளில் சாக்லேட்களை அறிமுகம் செய்துள்ளது.
கேலக்சி பிராண்ட் சாக்லேட்கள் புனேயில் உள்ள கெத் என்னும் இடத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இது இந்நிறுவனத்தின் இரண்டாவது பாரம்பரிய சாக்லேட் ஆகும். ஏற்கனவே இந்நிறுவனம் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
மார்ஸ் ரிக்லி நிறுவனம் துவங்கப்பட்ட 1960-ம் ஆண்டு முதல் தற்போது வரையிலான சாக்லேட் அனுபவத்தை கேலக்சி மறுவரையறை செய்துள்ளது. இந்திய நுகர்வோர்களுக்காக அவர்கள் விரும்பும் வகையில் இந்த சாக்லேட்டை இந்நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த சாக்லேட்கள் இந்தியர்கள் விரும்பும் சுவைகளில் தயாரிக்கப்படுகின்றன. இது ஸ்மூத் மில்க் மற்றும் கிரிஸ்பி ஆகிய 2வித சுவைகளில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 10 ரூபாய்க்கு 54 கலோரிகளை இந்த சாக்லேட் கொண்டுள்ளது.
‘இந்தியர்களுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ புதிய கேலக்சி பிராண்ட் சாக்லேட் குறித்து மார்ஸ் ரிக்லி, இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் கல்பேஷ் ஆர். பர்மர் கூறுகையில், இந்திய நுகர்வோருக்கு சிறந்த சுவையான சாக்லேட்டை வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். இன்று, உயர்ந்த மென்மையான சாக்லேட் அனுபவத்தை வழங்க பிரத்யேகமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய கேலக்சி பிராண்டை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். கேலக்சி என்பது 60 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு உலகளாவிய பிராண்ட் ஆகும், இது மிகப்பெரிய சாக்லேட் பிராண்டுகளில் ஒன்றாகும். நுகர்வோருக்கு தூய்மையான மற்றும் மென்மையான சாக்லேட்டை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் புதிய கேலக்சி சாக்லேட்டை 10 ரூபாய்கு அறிமுகம் செய்துள்ளோம்.
இந்திய சந்தையானது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இது போன்ற பிரிவுகளில் எங்கள் வளர்ச்சியை மேலும் நாங்கள் துரிதப்படுத்த உறுதியாக உள்ளோம். உலகளவில் விரும்பப்படும் எங்களின் பாரம்பரிய பிராண்டுகளை இந்திய நுகர்வோருக்காக சிறந்த விலையில் பல்வேறு சுவைமிகுந்த புதிய சாக்லேட்களையும் நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம். நுகர்வோர் வித்தியாசமான சுவைகளை தேடுவதால், எங்களின் உள்ளூர் உற்பத்தி மையத்தின் மூலம் இந்திய நுகர்வோரின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படும். மேலும் தொடர்ந்து எங்களின் உலகளாவிய பிராண்டுகளை இந்திய சந்தைக்கு ஏற்ப பொருத்தமானதாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் எங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காரணமாக, உலக அளவில் சிறந்த சாக்லேட் பிராண்டில் ஒன்றான கேலக்சியின் ஸ்மூத் மில்க் மற்றும் கிரிஸ்பி ஆகியவை தற்போதுள்ள 40 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட விலையை விட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய சாக்லேட் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.
கேலக்சி மற்றும் ஸ்னிக்கர்ஸ் தவிர டபுள்மின்ட், ஆர்பிட், பூமர், பிம் பாம், சொலானோ மற்றும் ஸ்கிட்டில்ஸ் உள்ளிட்ட சாக்லேட்களையும் இந்நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கிறது. இந்திய நுகர்வோரின் பல்வேறு சுவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை, முட்டை கலக்காத ஸ்னிக்கர்ஸ், முந்திரி, பாதாம், பட்டர்ஸ்காட்ச் மற்றும் பழங்கள் நிறைந்த ஸ்னிக்கர்ஸ், டபுள்மின்ட், பான்மின்ட், மாங்காய் சுவை கொண்ட ஆர்பிட், ஆரஞ்சு சுவை கொண்ட பூமர், ஐஸ் போன்ற மிகுந்த குளிர்ச்சிமிக்க டபுள் மிண்ட் மற்றும் பல்வேறு சுவைமிகுந்த ஸ்கிட்டில்ஸ் போன்றவை இந்திய நுகர்வோருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன.