கேலக்ஸி ஏ சீரீஸ் சீரமைப்பு இந்தியாவில் சாம்சங்க் அறிமுகப்படுத்தும் 5 புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

கேலக்ஸி ஏ சீரீஸ் சீரமைப்பு இந்தியாவில் சாம்சங்க் அறிமுகப்படுத்தும் 5 புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்
கேலக்ஸி ஏ சீரீஸ் சீரமைப்பு இந்தியாவில் சாம்சங்க் அறிமுகப்படுத்தும் 5 புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்
கேலக்ஸி ஏ சீரீஸ் சீரமைப்பு இந்தியாவில் சாம்சங்க் அறிமுகப்படுத்தும் 5 புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

கேலக்ஸி ஏ சீரீஸ் சீரமைப்பு
இந்தியாவில் சாம்சங்க் அறிமுகப்படுத்தும் 5 புதிய ஸ்மார்ட்ஃபோன்கள்

•    108 எம்பி ஓஐஎஸ் கேமராவைப் போல் ஃப்ளாக்ஷிபுடன் கேலக்ஸி ஏ73 5ஜி அறிமுகம்
•    ஸ்லீக், டிரெண்டி வடிவமைப்புடன், ஓஐஎஸ் கேமரா, ஐபி67 தர ஆயுள், ஆற்றல்மிகு செயல்பாடு,  சூழலமைவு சலுகைகள் உள்பட பல்வேறு ஃப்ளாக்ஷிப் அம்சங்களைக் கொண்டது புதிய கேலக்ஸி ஏ சீரீஸ்

சென்னை: 2022 மார்ச் 29: இந்தியாவின் அதிக நம்பகத்தன்மை கொண்ட ஸ்மார்ட்ஃபோன் பிராண்டான சாம்சங்க் ஐந்து புதிய மாடல்களை (கேலக்ஸி ஏ13/ஏ23/ஏ33 5ஜி/ஏ53 5ஜி/ஏ73 5ஜி)அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்டைலிஷ் மற்றும் நீடித்த ஆயுள் வடிவமைப்புடன், புத்துணர்வு தரும் புதிய வண்ணங்கள் மற்றும் ஃப்ளாக்ஷிப் போன்ற அம்சங்களுடன் கேலக்ஸி ஏ சீரிஸ் சீரமைக்கப்பட்டுள்ளது.  கேலக்ஸி சமீபத்திய கண்டுபிடிப்புகளின் முழுமையான பேக்கேஜை, அனைவருக்கும் ஏற்ற விலையில், அதி நவீன தொழில்நுட்பத்துடன் வழங்குவதை இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது.   

ஃப்ளாக்ஷிப் லெவல் 108 எம்பி கேமரா, ஆபிடிகல் இமேஜ் ஸ்டபிலைசேஷன் (ஓஐஎஸ்), மேம்பட்ட ஆயுள், தண்ணீர் மற்றும் தூசு எதிர்ப்புக்கான ஐபி67 தர மதிப்பீடு, ஆற்றல்மிகு ஸ்நாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர் மற்றும் சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, 120 ஹெச்இசட் ரெஃப்ரெஷ் விகிதம் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது கேலக்ஸி ஏ73 5ஜி.

இது குறித்து சாம்சங்க் மொபைல்ஸ், இந்தியாவுக்கான சில்லரை வணிகம் & சந்தையியல் பிரிவு தலைவர் மஹேஷ் ஆலந்தட் கூறுகையில் ‘முடிவற்ற சாத்தியங்களைச் செயல்படுத்தும் கேலக்ஸி அனுபவத்தின் வெளிப்படைத் தன்மையை நாங்கள் நம்புகிறோம். இந்த நம்பிக்கையை ஃப்ளக்ஷிப் போன்ற அம்சங்கள் மற்றும் அனைவருக்கும் ஏற்ற விலையில் கேலக்ஸி ஏ சீரீஸ் உறுதிப்படுத்துகிறது.   ஸ்டைல், ஆற்றல், பல்துறை சிறப்புகள் ஆகியவை மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஐந்து புதிய மாடல்களை கேலக்ஸி அறிமுகப்படுத்தி உள்ளது.  கேலக்ஸி ஏ73 5ஜி சம்மந்தப்பட்ட பிரிவில் 108 எம்பி ஓஐஎஸ் கேமரா, ஆப்ஜெக்ட் எரேசர், ஏஐ ஃபோடோ ரீமாஸ்டர், ஃப்ளூயிட் ஸ்மூத் 120 ஹெச்இசட் சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே, தண்ணீர் & தூசு எதிர்ப்புத் திறன் ஆகிய இணையற்ற அம்சங்களுடன், ஈடற்ற அனுபவத்தை வழங்கும்’ என்றார். 

கேலக்ஸி ஏ73 5ஜி
அசத்தல் கேமரா :  கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் ஓஐஎஸ்ஸுடன் கூடிய 108 எம்பி கேமரா மிகச் சிறிய காட்சியையும், உயரிய தரத்தில் துல்லியமாக எடுக்கும் திறன் கொண்டது. நிழற்படங்கள் மற்றும் காணொலிகள் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிவதை ஓஐஎஸ் உறுதிப்படுத்தும். முந்தைய தலைமுறை ஸ்மார்ட்ஃபோனுடன் ஒப்பிடுகையில் 44% பெரிய பிக்ஸெலுடன் நிழற்படங்களில் உச்சகட்ட தெளிவை வழங்கும்.  நிழற்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் ஆப்ஜெக்ட் எரேசர், பழைய & குறைந்த ரெசொல்யூஷன் நிழற்படங்களுக்கு புதுப் பொலிவு தரும் ஏஐ ஃபோடோ ரீமாஸ்டர்,   ப்ரொபைல் படங்களை எடுக்க போர்ட்ரைட் மோட் என ஃப்ளாக்ஷிப் அம்சங்கள் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் உண்டு. 

அசத்தல் வடிவமைப்பு : கேலக்ஸி ஏ73 5ஜி சிக் ஆகவும், ஸ்லிம் ஆகவும் (7.6 எம்எம்), ஸ்லீக்கான வடிவமைப்புடன் எங்குச் சென்றாலும் எளிதாகக் கையில் எடுத்துச் செல்ல வசதியானது.  ஆசம் மிண்ட், ஆசம் க்ரே மற்றும் ஆசம் வொயிட் ஆகிய மூன்று அழகான வண்ணங்கள் வடிவமைப்புக்கு மேலும் எழில் சேர்க்கும். 

அசத்தல் ஆயுள் : தண்ணீர் துளி, தூசு ஆகியவை உள்ளே புகாமல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஐபி67 தரச் சான்றிதழ் பெற்றது கேலக்ஸி ஏ73 5ஜி.  டிஸ்ப்ளேவில் உள்ள கார்னிங்க் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு அதை இன்னும் வலுப்படுத்தி கீறல்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 

அசத்தல் டிஸ்ப்ளே : 6.7 இன்ச் எஃப்ஹெச்டி+ இன்ஃபினிடி-ஓ சூப்பர் அமோலெட்+ டிஸ்ப்ளே ஆகிய சிறப்பம்சங்களுடன் 800 நிட்ஸ் ஒளிர்தன்மை கொண்டது கேலக்ஸி ஏ73 5ஜி. 120 ஹெச்இசட் ரெஃப்ரெஷ்  விகிதம் மிருதுவான ஸ்க்ரோலிங்க் மற்றும் உயர்தர கேமிங்க் செயல்பாட்டுக்கு உத்தரவாதம் அளிக்கும். ஸ்லிம்மர் பெஜெல்ஸுடன் கூடிய சூப்பர் அமோலெட்+ திரை ஆழமான காணும் அனுபவத்தை வழங்கும்.  கூடுதலாக, கேலக்ஸி ஏ73 5ஜி-இல் பொருத்தப்பட்டுள்ள ஆம்பியண்ட் லைட் அடாப்டிவ் டோன் கண்ட்ரோல் (ஏடிசி) வெளிப்புறத் தெரிநிலையைப் பகல் நேரத்தில்  மேம்படுத்தும்.  

அசத்தல் செயல்பாடு : கேலக்ஸி ஏ73 5ஜி-இல் உள்ள ஸ்நாப்டிராகன் 778ஜி 5ஜி புராசஸர் மல்டி டாஸ்கிங்க் எனப்படும் பல்வேறு பணிகளை எளிதாகச் செய்து முடிக்க உதவும். இதிலுள்ள ராம் ப்ளஸ் மூலம் 16ஜிபி வரை ராம் விரிவுபடுத்தலாம்.   இதிலுள்ள 8ஜிபி + 128 ஜிபி மற்றும் 8ஜிபி + 256 ஜிபி ஆகிய 2 வேரியண்ட்களை 1 டிபி ஸ்டோரேஜ் வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். 

அசத்தல் பாதுகாப்பு & ஃப்யூசர் ரெடி : கேலக்ஸி ஏ73 5 ஜி-இல் உள்ள சாம்சங்க் டிஃபென்ஸ் கிரேட் பாதுகாப்பு தளமான நாக்ஸ் உங்கள் தனிப்பட்ட தரவுகளை நிகழ் நேரத்தில் உச்ச கட்டமாகப் பாதுகாக்கும். மேலும் ஆல்ட் இஸ்ட் விசை பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் தகவல்கள் தனித்துவமாகும். செயலிகளுடன் நீங்க பகிரும் தகவல்களை பிரைவசி டாஷ்போர்ட் கட்டுப்படுத்தும்.  

கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்ஃபோன் 5ஜி ஆதரவு, அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் ஆண்ட்ராயிட் 12 ஆகியவற்றுடன் வருவதுடன், 4 ஆண்டுகள் மென்பொருள் அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகள் செக்யூரிடி அப்டேட்களுக்கும் ஆதரவளிக்கும்.  
கேலக்ஸி ஏ53 5ஜி
தெள்ளத் தெளிவாகத் துல்லியமான நிழற்படங்களுக்கு அசத்தல் 64எம்பி ஓஐஎஸ் கேமரா, 6.5 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே மென்மையான ப்ரௌசிங்குக்குத் துறையிலேயே மிகச் சிறந்த 120 ஹெச்இசட் ரெஃப்ரெஷ் விகிதம், தண்ணீர் துளி, தூசி புகாமல் பாதுகாக்கும் ஐபி67 தர மதிப்பீடு,  நீடித்த ஆயுளுடன் டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கார்னிங்க் கொரில்லா க்ளாஸ் 5,  உள்ளிட்ட சிறப்பம்சங்கள் கேலக்ஸி ஏ53 5ஜி-இல் பொருத்தப்பட்டுள்ள. ஏ-சீரீஸில் முதல் முறையாக கேலக்ஸி ஏ53 5ஜி-இல் 5என்எம் ஏக்ஸிநோஸ் 1280 ப்ராஸசர் ஆற்றல்மிகு இயக்கத்துக்கும், மேம்பட்ட திறனுக்கும் உறுதியளிக்கும்.  இதிலுள்ள சாம்ஸங்க் டிஃபென்ஸ் கிரேட் செக்யூரிடி நாக்ஸ் 4 வருடங்களுக்கு மென்பொருள் அப்கிரேட்களையும், 5 ஆண்டுகளுக்குச் செக்யூரிடி அப்கிரேட்களையும் பெறும்.     

கேலக்ஸி ஏ53 5ஜி
ஓஐஎஸ் மற்றும் 48 எம்பி மெயின் லென்ஸுடன் கூடிய  க்வாட் ரியர் கேமரா, ஆற்றல்மிகு 5என்எம் எக்ஸிநோஸ் 1280 ப்ராஸசர், 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 90 ஹெச்இசட் ரெஃப்ரெஷ் விகிதம், சர்ரவுண்ட் சவுண்ட் அனுபவத்துக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் ஆகியவை கேலக்ஸி ஏ33 5ஜி ஸ்மார்ட்ஃபோனிலுள்ள சிறப்பம்சங்கள்.  தண்ணீர்த் துளி, தூசு புகாது பாதுகாக்கும் ஐபி67 தர மதிப்பீடு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 3 ஆண்டுகள் மென்பொருள் அப் கிரேட் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிடி அப்டேட்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை.  

கேலக்ஸி ஏ23
6.6 இஞ்ச் எஃப்ஹெச்டி+ டிஸ்ப்ளே, ஸ்மூத்தான ஸ்க்ரோலிங்குக்கு 90 ஹெச்இசட் ரெஃப்ரெஷ் விகிதம்,  குறைந்த வெளிச்சத்திலும் துல்லியமான தெளிவான நிழற்படங்களுக்கு ஓஐஎஸ் 50 எம்பி மெயின் லென்ஸுடன் கூடிய க்வாட் ரியர் கேமரா, ஸ்நாப்டிராகன் 680 4ஜி ப்ராஸசர், 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்க் திறன் கொண்ட 5000 எம்ஏஹெச் பேட்டரி எனப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்ஃபோன். 

கேலக்ஸி ஏ13
கேலக்ஸி ஏ13 ஸ்மார்ட்ஃபோனிலுள்ள 6.6 இன்ச் எஃப்ஹெச்டி + டிஸ்ப்ளே கண்களுக்குக் குளிர்ச்சியான காணும் அனுபவத்தை வழங்கும்.  இதிலுள்ள 50 எம்பி க்வாட் கேமரா மற்றும் 8எம்பி ஃப்ரண்ட் கேமரா ஆகியவை செல்ஃபிக்களுக்கு ஏற்றவை.  எக்ஸிநோஸ் 850 சிப்செட் மற்றும் 5000 எம்ஏஹெச் மின்கல ஆற்றலில் இயங்குகிறது. 

விலை, சலுகைகள் மற்றும் கிடைக்கும் தன்மை
கேலக்ஸி ஏ73 5ஜி வரும் நாள்களில் ப்ரீ-புக்கிங்க் பதிவுகளுக்காக சாம்சங்க். காம் தளத்திலும், சில்லரைக் கடைகளிலும்,  தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் போர்டல்களிலும் திறந்திருக்கும்.

புதிய கேலக்ஸி ஏ53 5ஜி, கேலக்ஸி ஏ33 5ஜி, கேலக்ஸி ஏ23 மற்றும் கேலக்ஸி ஏ13 ஆகியவை பீச், ப்ளூ, பிளாக் மற்றும் வொயிட் ஆகிய நான்குஅசத்தல் வண்ணங்களில் கிடைக்கும். 

கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி + 128 ஜிபி ரூ 34499/-க்கும், 8ஜிபி + 128 ஜிபி                 ரூ 35999/-க்கும் கிடைக்கும்.  

கேலக்ஸி ஏ23 ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி + 128 ஜிபி ரூ 19499/- மற்றும் 8ஜிபி + 128 ஜிபி           ரூ 20999/- விலையில் கிடைக்கும்.  

கேலக்ஸி ஏ13 4ஜிபி + 64ஜிபி ரூ 14999/-க்கும், 4ஜிபி + 128 ஜிபி ரூ 15999/-க்கும், 6ஜிபி + 64ஜிபி ரூ 17499/- க்கும் கிடைக்கும்.  

About Samsung Electronics Co Ltd.

Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the world of TVs, smartphones, wearable devices, tablets, digital appliances, network systems and memory, system LSI, foundry, and LED solutions. For the latest news on Samsung India, please visit Samsung India Newsroom at http://news.samsung.com/in. For Hindi, log on to Samsung Newsroom Bharat at https://news.samsung.com/bharat. You can also follow us on Twitter @SamsungNewsIN

Spec sheet:

 

 

Galaxy A73 5G

Galaxy A53 5G

Galaxy A33 5G

Galaxy A23

Galaxy A13

Display

6.7" FHD+       Super AMOLED+
Infinity-O 120Hz

6.5" FHD+       Super AMOLED Infinity-O 120Hz

6.4" FHD+       Super AMOLED
 90Hz

6.6" FHD+ LCD
90Hz

6.6" FHD+ LCD
60Hz

Rear Camera

108(OIS)/12/5/5

64(OIS)/12/5/5

48(OIS)/8/5/2

50(OIS)/5/2/2

50/5/2/2

Front Camera

32MP

32MP

13MP

8MP

8MP

Processor

Snapdragon 778G

Exynos 1280 (5nm)

Exynos 1280 (5nm)

Snapdragon 680 4G

Exynos 850

Battery

5000mAh, 25W support*

5000mAh, 25W  support*

5000mAh, 25W  support*

5000mAh, 25W support#

5000mAh, 15W  support#

Durability

Spill, splash & dust resistant (IP67 rated)

Spill, splash & dust resistant (IP67 rated)

Spill, splash & dust resistant (IP67 rated)

 

 

Others

Stereo speakers

Knox Security

 

Stereo speakers

Knox Security

 

Stereo speakers

Knox Security

 

Knox Security

 

 

OS Upgrades

4 years

4 years

3 years

2 years

2 years

Security Updates

5 years

5 years

4 years

4 years

4 years