ஜிஎஸ்டி வரி இழப்பு: தமிழகத்திற்கு ரூ.2775 கோடியை திரும்ப தரவேண்டும்

ஜிஎஸ்டி வரி இழப்பு: தமிழகத்திற்கு ரூ.2775 கோடியை திரும்ப தரவேண்டும்

புது டெல்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். 

இதில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார், அப்போது அவர் : "செப்டம்பர் 2018 வரை ஏற்பட்ட ஜி.எஸ்.டி. வரிஇழப்பு தொகை ரூ.2775 கோடியை மத்திய அரசு திரும்பத்தர வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீது வரி குறைப்பை தவிர்க்க வேண்டும். வணிகச்சின்னம் இடப்பட்ட உணவு தானியங்கள் உள்ளிட்டவை மீதான வரிகளை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளார்."