மதுசூதனனுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு

மதுசூதனனுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு
GK Vasan supports Madusudanan in RK nagar constituency

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தங்கள் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் மதுசூதனனை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக அறிவித்தார்.

மேலும் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

GK Vasan supports Madusudanan in RK nagar constituency