முன்னால் கல்வித்துறை அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

முன்னால் கல்வித்துறை அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை
Former educational minister Aranganayagam gets 3 year jail

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னால் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகத்திற்கு 3-ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கல்வித்துறை அமைச்சராக 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை பதவி வகித்த காலத்தில் இவருடைய மனைவி, மகன்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 15 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக அரங்கநாயகம் மீது 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, 18 வருடங்களாக தொடர்ந்து நடந்துவந்த இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று (ஏப்ரல் 17ஆம் தேதி) வழங்கப்பட்டது. அதன்படி, அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Former educational minister Aranganayagam gets 3 year jail