அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்!!

அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்!!
அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்!!

புளோரிடா : அமெரிக்காவில் பெண்ணை வேட்டையாடிய 13 அடி நீள ராட்சத முதலையை புளோரிடா அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் தென் கிழக்கு மாகாணமான புளோரிடா தலைநகரமான டல்லஹாசீயின் பினாலஸ் கவுன்டி பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் அருகே 13 அடி நீள முதலை ஒன்று தென்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பிறகு மனித உடலின் பாகங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள் 13 அடி நீள ஆண் முதலையை சுட்டிக் கொன்று, அதன் வாயில் இருந்த மனித உடலை மீட்டனர்.

விசாரணையில் முதலையின் பிடியில் சிக்கி பலியானது அந்த பகுதியைச் சேர்ந்த 41 வயதான சப்ரீனா பெக்காம் என்பது தெரியவந்தது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ராட்சத முதலை ஒன்று ஏரியில் வாழ்ந்துள்ளதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், மேலும் முதலைகள் அந்த ஏரியில் இருக்கின்றனவா என ஆராய அந்த பகுதியைச் சேர்ந்த வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அது உண்மையில் முதலை தானா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.