நுண் ஊட்டச்சத்து குறைபாடுகள்

நுண் ஊட்டச்சத்து குறைபாடுகள்
Experts advice on overcoming micronutrient deficiency

நுண் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய உணவ அடிப்படையிலான அணுகுமுறை அவசியம் நிபுணர்கள் கருத்து

மே, 2017: நிபுணர்களின் படி, நுண்ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கான சிறந்த வழிமுறையாக, உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளை அமல்படுத்துவது திகழ்கிறது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பிடத்தக்க அளவிலான குறைவான விழிப்புணர்வு மற்றும் அதிக ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் கிடைக்காமல் இருப்பதனால், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவிலான ஊட்டச்சத்துகள்கிடைப்பதில்லை என்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

வைட்டமின்கள் (A,B,C,D) போன்றவைகள்) மற்றும் தாதுச்சத்துகள் (இரும்பு, ஜின்க் போன்றவைகள்) உட்பட்ட நுண்ஊட்டச்சத்துகள், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய அம்சமாகும். ஏனெனில், குழந்தை பருவத்தில் ஏற்படும் பாதிப்புகள், ஆரோக்கியத்தின் மீது நீண்ட நாள் தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

லான்செட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஐந்த வயதிற்கு கீழ்பட்ட ஏறக்குறைய 2 மில்லியன் குழந்தைகளின் இறப்புகளை உணவு அடிப்படையிலான அணுகுமுறைகள் மற்றும் ஆரோக்கியமான நடத்தை வழக்கங்கள் மூலம் தவிர்த்திருக்கலாம் என்பதும் மற்றும் மீண்டும் மீண்டும் நோய் ஏற்படும் இடர்பாட்டை குறைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை, வெர்டியாஸ் சில்ட்ரன்ஸ் கிளீனிக், குழந்தைநல மருத்துவர் ஆலோசகர் டாக்டர்.ஸ்ரீதர் அவர்கள், “நுண்ஊட்டச்சத்துகளை உடலால் உற்பத்தி செய்ய முடியாது என்பதால், துணை உணவுகளின் வழியாக அவைகள் வழங்கப்பட வேண்டும். புத்திகூர்மை உட்பட, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டில், உணவு அடிப்படையிலான அணுகுமுறைகள் நேர்தறை தாக்கத்தைக் கொண்டுள்ளது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது ஏற்கனவே உள்ள ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைப்பதுடன், குழந்தையின் உணவு முறையில் ஊட்டச்சத்துகள் வேறுபாட்டுத்தன்மையையும் சேர்க்கிறது”என்று கூறினார்.

“குழந்தைகள் அவர்களது முழு சாத்தியத்திறனை எட்டத்தவறலாம் மற்றும் 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தொற்றுகளுக்கு ஆளாகவும் நேரிடலாம். எனவே, இத்தகைய முக்கியமான காலட்டத்தில், முழுமையான உணவு வழங்கலின் வழியாக, போதுமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் வழங்குதல் அதிகளவு பரிந்தரை செய்யப்படுகிறது” என்று கூறுகிறார், டாக்டர்.ஸ்ரீதர் அவர்கள்.

Experts advice on overcoming micronutrient deficiency