என்னைத் தவிர மற்றவர்கள் பயப்படுகிறார்கள்: கமல்ஹாசன்

என்னைத் தவிர மற்றவர்கள் பயப்படுகிறார்கள்: கமல்ஹாசன்
Expect me others were afraid Says Kamal Hassan

சென்னை: தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-

A request to my fans and the discerning people of TN. நேர்மையான தமிழகக் குடிமக்களுக்கும் ,என் தலைமையை ஏற்ற தொண்டர் படைக்கும் சமர்பணம்

*இந்தி திணிப்புக்கு எதிராக என்றைக்கு குரல் கொடுத்தேனோ அன்றே நான் அரசியல்வாதி தான்.

*ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறு, அரசியலுக்கு வா எனக் சொல்பவர்கள், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்.

* ஊழல் குறித்த ஆதாரங்களை இணையதளம் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

*டிஜிட்டல் யுகம் என்பதால் ஊழல் குறித்த ஆதாரங்களை டிஜிட்டலாக பதிவு செய்யவேண்டும்.

*ஊழல் குறித்த விவரங்களை www.tn.gov.in.ministerslist-இல் அனுப்பலாம்.

*ஊழல் குறித்த இணையதளத்தில் மக்களே குரல் கொடுக்க வேண்டும்.

*எல்லா துறைகளுக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள், என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

*கேள்வி கேட்பவர்களை கைது செய்யும் அளவுக்கு தென்னகத்தில் சிறைகள் இல்லை.

*துணிவுள்ள சினிமாக்காரர்கள் குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.

*ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் மறந்திருந்தால் நினைவு படுத்த மக்கள் இருக்கிறார்கள்.

*சினிமாவுக்கு வரிவிலக்கு பெற என்னைப்போல் சிலரை தவிர மற்றவர்கள் பயந்து லஞ்சத்துக்கு உடைந்தை.

இவ்வாறு கமல் ஹாசன் கூறினார்.

Expect me others were afraid Says Kamal Hassan