டிசம்பர் 8 – சென்னையில் ஓர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் !

டிசம்பர் 8 – சென்னையில் ஓர் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் !

பார்ப்பவர்களின் மனதைத் தொடும் கலைநிகழ்ச்சிகள்.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் துடிப்பான நடனங்கள்.

பிரபல கர்நாடக இசை பாடகி கல்பனா ராகவேந்தரின் இதமான கர்நாடக இசை,

சகோதரர் மோகன் சி,லாசரஸ் மற்றும், சகோதரர் ஜெர்சன் எடின்பரோ அவர்களின் சிறப்பு பங்கேற்பு

இப்படிக் கொண்டாட்ட மயமான இசை, நடனம். சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் இணைந்த அற்புதமான மாலைப் பொழுது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் மகிழ்ச்சி பொங்கும் திருவிழாவை சத்தியம் தொலைக்காட்சி பல்வேறு நிறுவனங்களின் ஏற்பாதரவுடன்  இணைந்து நடத்த இருக்கிறது. பார்வையாளர்களுக்கான அனுமதி இலவசம்.

சந்தோஷம் ததும்பும் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது சத்தியம் தொலைக்காட்சி.