மாணவர்களுக்கான மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

மாணவர்களுக்கான மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
மாணவர்களுக்கான மதிய உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளியில் மதிய உணவின்றி மாணவர்கள் பரிதவித்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற அவலநிலை தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அரசு அதிகாரிகளை நியமித்து தமிழகம் முழுவதும் மதிய உணவு திட்டம், மாணவர்களுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் உணவின்றி தவிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.