நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு

நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு
நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு
நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு

அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர் நிகழ்ந்துள்ளதால் துருக்கி அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து உறங்கப்போன துருக்கி மக்கள் பலர் அதுதான் கடைசி இரவாக இருக்கும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். துருக்கியின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது. கட்டிடங்கள் பயங்கரமாக ஆடியதில் விழுந்து நொறுங்கின.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. கண்விழித்தவர்கள் உயிர் பிழைக்க வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக சரிந்தன. இதில் குடியிருப்புகளுக்குள் இருந்தவர்கள் உயிரோடு சமாதியாகினர். நிலநடுக்கம் தேசிய பேரழிவாக அறிவிக்கப்பட்டது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஒரு அளவுக்கு மேல EPS-ஐ பாஜக எதுவும் செய்ய முடியாது - மணி, பத்திரிகையாளர் 

மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. தோண்ட தோண்ட குவியல் குவியலாக சடலங்கள் தென்பட்டன. எங்கும் மரண ஓலம் கேட்டது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடராக உலக நாடுகள் கருதுகின்றன. துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. அங்கும் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பல நூறு உயிர்கள் பறிபோயுள்ளன.

துருக்கியில் பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படவே கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. இந்நிலையில், நிலநடுக்கத்தில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி நாட்டு அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி அதிபர், இது மிகப்பெரிய தேசிய பேரழிவு என்று அறிவித்தார்.

உறக்கத்தில் இருந்து விழிக்காமலேயே பல உயிர்கள் பறிபோயுள்ளன. உறவினர்களை காணாமல் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளில் தேடி வருகின்றனர். துருக்கியிலும் சிரியாவிலும் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.