டிரீம் மெட்ராஸ் 2017

டிரீம் மெட்ராஸ் 2017
Dream Madras 2017 an Inter-School Competition

டிரீம் மெட்ராஸ் 2017 – சென்னையை சேர்ந்த பள்ளிகள் பங்குபெறும் போட்டி - தலைப்பு - "பாதுகாப்பான தெருக்கள்"

சென்னை, ஆகஸ்ட் 2017: சென்னை தன்னுடய 378'வது பிறந்த நாளை கொண்டாட மிகவும் தகுதியான நகரம் ஆகும். மெட்ராஸ் வீக் (Madras Week) - சென்னைவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகரத்தின் மரபுகள், மற்றும் அதன் பெறுமைகளை மகிழ்ச்சியுடன் வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சி சென்னை நகரத்தின் கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகளை பொது மக்களுக்கு உணர்த்தும் ஓர் நிகழ்ச்சி ஆகும்.

இது போன்ற பல முயற்சிகளில் ஒன்றானது தான் டிரீம் மெட்ராஸ். சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பள்ளிகளிடையே நடத்தப்படும் போட்டியாகும். இந்த போட்டியை யுனைட்டெட் வேய் சென்னை (United Way Chennai - NGO) என்கிற ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பின் தலைமையில் நடத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு பல்வேறு சமூக முயற்சிகள் மூலம் தமிழக மக்களின் நலன் காக்கும் அமைப்பாக இருந்து வருகிறது.

இந்த போட்டி 2017, ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி காலை 10 மணி முதல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.

டிரீம் மெட்ராஸ் 2017 விழா, யுனைட்டெட் வேய் சென்னை (United Way Chennai) அமைப்பினால் தொடங்கப்பட்ட மெட்ராஸ் வீக் கொண்டாட்டத்தின் 6'ஆவது ஆண்டு பாராட்டு விழா ஆகும்.

இவ்விழா மூலம் இளைய தலைமுறை “சிறந்த மற்றும் பாதுகாப்பான தெருக்கள்” ஏன்ற தலைப்பில் தங்களின் படைப்பு தன்மையை பார்வைக்கு கொண்டு வர ஓர் சிறந்த வாய்ப்பை வழங்க யுனைட்டெட் வேய் சென்னையின் குறிக்கோளாக இருக்கிறது. டிரீம் மெட்ராஸ் ஸ்கூல் சாம்பியன்ஷிப் விருதுகள் 2017 போட்டியை வெல்ல, சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலிருந்து சுமார் 150’க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கு பெறுகின்றனர்.

இந்த ஆண்டிற்கான போட்டியின் தலைப்பு "பாதுகாப்பான தெருக்கள் தேவை" (Need for Safe Streets). இந்த போட்டியில் மாணவர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்த சுவரொட்டிகள், வரைபடங்கள், தெர்மோகோல் மாதிரிகள், விளக்கக்காட்சிகள் மற்றும் பாத்திரங்கள் ஆகியவற்றின் வடிவங்களை வைத்து செயல்படுத்துகிறார்கள்.

மாணவர்களின் காட்சியளிப்பு, ஒட்டுமொத்த பொது பாதுகாப்பு மற்றும் வேகம் துணை கருப்பொருள்கள் பற்றி விளக்குவதாக இருக்கும். பாதுகாப்பு கேமரா, போக்குவரத்து சீர்படுத்துதல், பார்க்கிங் பதனிடுதல், தெரு வடிவமைப்பு, பாதுகாப்பான தெருக்கள் மின் விளக்குகள், இனிய சாலை பிரச்சாரம் ஆகியவைகள் உள்ளடங்கும். இப்போட்டியில் 2 பட்டறைகள் நடத்தப்படுகிறது. ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு; மற்றும் பிற ALERT இல் – உடனடி சாலை விபத்துக்களில் அவசர நிலமைகளில் பதிலளிக்க பயன்படும் கருவிகள் காட்சியளிக்கபடுகின்றன. பங்கேற்பாளர்களுக்கான நுண்ணறிவு. மேலும் இவ்விழாவில் மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு போட்டி நடத்தப்படும்.

ஆகஸ்ட் 2017, 24 ஆம் தேதி நடைபெறும் இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

Dream Madras 2017 an Inter-School Competition