டாக்டர்கள் அறிவுரை

டாக்டர்கள் அறிவுரை
Do not stop using inhalers without consulting doctors

Dr.R. Narasimhan, Senior Pulmonologists, Apollo Hospitals, Dr.R. Sridhar, Medical superintendent at Govt. Tambaram Sanatorium Hospital, Stanley Medical College

ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர் பயன்பாட்டை சுயமாக நிறுத்த கூடாது : டாக்டர்கள் அறிவுரை

சென்னை, ஏப்ரல் 28: இன்ஹேலர்கள் பயன்பாட்டினை நிறுத்த நினைக்கும் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம் கலந்தாலோசிகாமல் செயலாற்றுவது என்பது, மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் என்று நுரையீரல் நோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் ஆர்.நரசிம்மன், டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் வலியுறுத்தினார்.

நுரையீரல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மருத்துவர்.டாக்டர் ஆர்.நரசிம்மன், நுரையீரல் தொற்றுநோய்நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை, கூறுகையில், "நீண்ட கால சிகி்ச்சை தேவைப்படும் நாட்பட்ட நோய் ஆஸ்துமா ஆகும். பல நோயாளிகள் நோய் சுகமானதை உணர்ந்தவுடன் சில வாரங்களில் இன்ஹேலர்களை பயன்படுத்துவதை கைவிட்டுவிடுகின்றனர்.

அவ்வாறு கைவிடுவது, எது அவர்களை சிறப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் பராமரிக்கிறதோ அதையே முற்றிலுமான கைவிடுவதற்கு காரணமாகிறது. இன்ஹேலர்கள் பயன்பாட்டினை நிறுத்த நினைக்கும் ஒவ்வொரு சிறிய விஷயம் குறித்தும் மருத்துவரிடம் கலந்தாலோசிகாமல் செயலாற்றுவது என்பது, மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்" என்று கூறினார்.

நீங்கள் உள்ளிழுக்கும் காற்று மற்றும் எவ்வளவு விரைவாக அதை வௌியேற்றுகிரீர்கள் போன்றவற்றை மதிப்பிடும் ஸ்பைரோமெட்ரி சோதனைகள் பல்வகைப்பட்ட நுரையீரல் நோய்களுக்கான சிறந்த மதிப்பீட்டு முறையாகத் திகழ்கிறது. நுரையீரல் எவ்வளவு சிறப்பாக சுவாசிக்கிறது என்பதை ஸ்பைரோமெட்ரி சோதிக்கிறது. அதே போல், பல்மனரி செயல்பாட்டுச் சோதனைகள் எனப்படுபவை நுரையீரல் எவ்வளவு சிறப்பாக சுவாசிக்கிறது மற்றும் எத்துணை திறனோடு ரத்தத்தில் ஆக்சிஜனை கொண்டு செல்கிறது போன்றவைகளை மதிப்பிடும். நுரையீரல் கொள்ளளவு சோதனைகள் நுரையீரல் இடர்பாடுகளை கண்டறியும்.

டாக்டர் ஸ்ரீதர், மருத்துவ கண்காணிப்பாளர், தாம்பரம் சானடோரியம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, "இந்த உலக ஆஸ்துமா தினத்தில், ஆஸ்துமா அல்லது சுவாசிப்புபிரச்சனைகள் அறிகுறிகள் கொண்ட மக்கள், ஆஸ்துமா அறிகுறிகளை புரிந்துகொள்வதற்கான முதல் படிநிலையாக ஸ்பைரோமெட்ரி சோதனை அல்லது பல்மனரி சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சிகிச்சைகள் தொடர்பான பொய்யான நம்பிக்கைகள் கட்டுடைக்கப்பட வேண்டும். ஆஸ்துமா மேலாண்மையின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பரவலாக ஏற்கப்பட்ட முதன்மை சிகிச்சை முறையாக இன்ஹேல்டு கார்டிகோஸ்டெராய்ட்ஸ் திகழ்கின்றன" என்றும் கூறினார்.

ஆஸ்துமா சிகிச்சையின் இலக்கு நோயைக் கட்டுப்படுத்துவதே ஆகும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறை - இன்ஹலேஷன் சிகிச்சையாகும். இந்தியாவில் இது தினமும் வெறும் ரூ.4 முதல் ரூ.6 வரையிலான விலைகளில் கிடைக்கப்பெறுகிறது. அதாவது, ஒராண்டு கால சிகிச்சை செலவீனமானது மருத்துவமனையில் ஒரு இரவு தங்குவதற்கு ஆகும் செலவுக்கு சமமாகும்.

இந்த தடைகற்களை கடந்து வருவதும் மற்றும் இன்ஹலேஷன் சிகிச்சையின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டு அதற்கு கீழ்படிந்து நடப்பதும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி மகிழ்ச்சிகரமான மற்றும் சிறப்பான வாழ்க்கை தரத்துடன் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாகும்.

Do not stop using inhalers without consulting doctors