சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி
Disproportionate assets case Supreme court dismissed Sasikala plea

புதுடெல்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தண்டனையை ரத்து செய்யக்கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த சீராய்வு மனுக்கள் மீதான வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் எந்த பிழையும் நாங்கள் கண்டறியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் சசிகலா உள்ளிட்டோருக்கான நான்காண்டு தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Disproportionate assets case Supreme court dismissed Sasikala plea