தினகரன் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை!

தினகரன் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை!
Delhi police to raid TTV Dinakarans residence

சென்னை: "இரட்டை இலை" சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை விசாரணைக்காக டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டில் டெல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்த உள்ளனர். ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பான ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை கைப்பற்றவே இந்த சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் இடைத்தரகர் சுகேசிடம் தொடர்பில் இருந்த தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் யார் எனவும் டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர், இதன் மூலம் போலீசாரின் விசாரணையில் சில முக்கிய அதிகாரிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Delhi police to raid TTV Dinakarans residence