தினகரன் மனைவியிடம் டெல்லி போலீசார் விசாரணை

தினகரன் மனைவியிடம் டெல்லி போலீசார் விசாரணை
Delhi police investigation on TTV Dinakarans wife

சென்னை: "இரட்டை இலை" சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் சுகேஷ் என்பவர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த டெல்லி கோர்ட் அனுமதி வழங்கியது.

தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவை விசாரணைக்காக டெல்லி போலீசார் சென்னை அழைத்து வந்தனர்.

இந்நிலையில், பெசன்ட் நகரில் உள்ள தினகரனின் வீட்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர், தினகரனின் மனைவி அனுராதாவிடம் சுகேஷின் புகைப்படத்தை காட்டி டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தினகரனின் உறவினர்களிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Delhi police investigation on TTV Dinakarans wife