தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு

தமிழக விவசாயிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு
Delhi CM Arvind Kejriwal supports protesting Tamil farmers

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

Delhi CM Arvind  Kejriwal supports protesting Tamil farmers