ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல்

ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல்
Dead threat to Jayalalithaas neice Deepa Jayakumar

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா வரும் ஏப்ரல்-12 ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளரான ஜெ.தீபாவிற்கு கொலைமிரட்டல் வருவதாக அப்-பேரவையில் உயர்மட்ட குழு நிர்வாகி பசும்பொன் பாண்டியன் நேற்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த 28-ந் தேதி ஜெ.தீபாவிடம் செல்போனில் பேசிய நபர், "தேர்தல் பிரசாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்" என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். மீண்டும் கடந்த 2-ந் தேதி செல்போனில் பேசிய நபர், ஜெ.தீபாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.

மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அந்த நபர் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடைய முகமது என்பவர் என தெரியவந்தது. எனவே, ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Dead threat to Jayalalithaas neice Deepa Jayakumar