நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கவலைக்கிடம்!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கவலைக்கிடம்!
Dawood Ibrahim critically admitted in Karachi hospital

கராச்சி: கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250 பேர் உயிரிழந்தனர், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது, அதை தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி தலைமறைவானார்.

தற்போது தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் குடும்பத்துடன் தங்கி வருகிறார். அவரை ஒப்படைக்கும்படி பலமுறை இந்தியா கேட்ட போது, அவர் அங்கு இல்லை என பாகிஸ்தான் மறுத்துவருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Dawood Ibrahim critically admitted in Karachi hospital