2018 ஜனவரி 7 அன்று காலை முதல் மாலை வரை மாரத்தான் ஓட்டம்

2018 ஜனவரி 7 அன்று காலை முதல் மாலை வரை மாரத்தான் ஓட்டம்

சென்னை: 2018 ஜனவரி: ‘2018 காலை முதல் மாலை வரையிலான மாரத்தான் ஓட்டத்தின் 6 ஆவது எடிஷன் (டான் டு டஸ்க் - டி2டி 2018) மூலம் திரட்டப்படும் நிதி சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குக், குறிப்பாகப் பொருளாதார வசதியில் பின் தங்கியவர்களுக்குப் பயன்படுத்தப்படும்’ என்று டி2டி சென்னை மாரதான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நெவில் எண்டவர்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.  இந்த மாரத்தான் ஓட்டம் 2018 ஜனவரி 7 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது. மாரத்தான் ஓட்டம் குறித்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி சாந்தா, நடிகர் அரவிந்த்சாமி, நடிகையும் லைஃப் அகெயின் அமைப்பின் நிறுவருமான கௌதமி தடிமல்லா,  ஜிஆர்டி ஹோட்டல்ஸ் & ரெசார்ட்ஸ் சிஓஓ விக்ரம் கோட்டா, நெவில் எண்டவர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனரும் அறங்காவலுருமான நெவில் ஜே பிலிமோரியா உள்பட சென்னையைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

செய்தியாளர்களிடையே சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா பேசுகையில் ‘புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணம். 40% புற்றுநோய்களுக்குப் புகையிலையின் பயன்பாடே முக்கியக் காரணம். நோயை ஒழிப்பதற்கு ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வும், நோய்க்குறிகளை முதலிலேயே கண்டுபிடிப்பதும் அவசரம் மட்டும் கட்டாயமும் ஆகும். மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நோயிலிருந்து உயிர் பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்தாலும், சிகிச்சைக்கான கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், நோயாளிகள் செலவு செய்ய இயலாத நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. ‘எந்த புற்றுநோயாளிக்கும் அவரது சமூக மற்றும் பொருளாதார வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல் அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பது இந்த மருத்துவமனையின் நோக்கமாகும். இந்தத் தேவைகளை நிறைவு செய்ய மருத்துவமனை கடுமையாகப் போராடி வரும் சூழலில் தாரளமாக நிதி உதவி அளித்துள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், நிதி ஆதாரங்களைத் திரட்டவும் 2018 காலை முதல் மாலை வரை (டான் டு டஸ்க்) சென்னை மாரத்தான் ஓட்ட முனைவை மேற்கொண்டுள்ள நெவில் ஜே பிலிமோரியாவின் பணி வரவேற்கத்தக்கது என்பதுடன் பாராட்டத்தக்கதும் கூட’ என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வரும் அரசு சாரா அமைப்பான நெவில் எண்டவர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் நெவில் ஜே பிலிமோரியா இது பற்றிக் கூறுகையில் ‘டி2டி மாரத்தான் போட்டிக்கு ஆதரவளிக்கும் கூட்டாளி நிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்களின் உறுதிப்பாடும், ஆர்வமும் மகிழ்ச்சி தருகிறது.  டி2டி மாரத்தான் போட்டிகளின் அடிப்படை நோக்கம் ஓட்டம் மற்றும் மிதி வண்டி ஓட்டுதல் மூலம் ஆரோக்கிய உடல் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும். ஒரே மாதிரியான சிந்தனையைக் கொண்ட நல்ல உள்ளங்களின் முனைவே டி2டி ஆகும். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார வசதி இல்லாத ஏழைக் குழந்தைளுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதுடன், இந்தப் புனிதப் பணி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.  டி2டி முந்தைய 5 எடிஷன்கள் மூலம், ஓடுதல் மற்றும் மிதி வண்டி ஓட்டுதல் மீதான ஆர்வம் காரணமாக ரூ 2.12 கோடிகள் திரட்டப்பட்டுள்ளது. மூளை சார்ந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கும், மூளை சாந்த முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காகவும், இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகமாகி உள்ள ‘தெராசூட் தெரபிக்கும்’, ரவுண்ட் டேபில் இந்தியா முனைவுடன் வகுப்பு அறைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் கட்டவும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள குழந்தைகளுக்காகவும், அறக்காட்டளை அமைப்புகளுக்கு ஆதரவளிக்கவும் டி2டி இந்தப் புனிதப் பணியில் பலரை ஊக்குவித்துள்ளது.  இந்த ஆண்டு டி2டி  குழு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும், பொது பகுதியைக் கட்டவும் நிதி ஆதாரங்களைத் திரட்டும்’ என்றார்.

ஜிஆர்டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் சிஓஓ விக்ரம் கோட்டா கூறுகையில் ‘டி2டி சென்னை மாரத்தான் ஓட்டம் 6ஆவது எடிஷன் மூலம் நெவிலுடன் தொடர்ந்து இணைந்திருப்பதிலும், அவரது முனைவுகளுக்கு ஆதரவளிப்பதிலும் ஜிஆர்டி ஹோட்டல்ஸ் மகிழ்ச்சி அடைகிறது. ஜிஆர்டி சென்னையின் ஐகானிக் பிராண்ட் என்பதால் சென்னை மக்களுக்கு ஜிஆர்டி ஹோட்டல்ஸ் பிடித்தமான இடமாகும்.  எனவே பிரபல ஐகானானிக் பிராண்டாகத் திகழும் ஜிஆர்டி மற்றொரு ஐகானிக் பிராண்டான நெவில் எண்டவர்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து செயல்படுவது இயற்கையே. இதன் காரணமாகவே ஒவ்வொரு எடிஷனிலும் ஜிஆர்டி மிகுந்த ஈடுபாடுடனும், உறுதியுடனும் பங்கேற்றது.  வரும் காலங்களிலும் டி2டி சென்னை மாரத்தான் ஓட்டங்கள் அனைத்திலும் இதேபோல் ஆர்வத்துடன் ஜிஆர்டி தொடர்ந்து பங்கேற்கும்’ என்றார்.

டி2டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக