முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் பஸ் கட்டணம் திடிரென்று உயர்த்தப்பட்டது, இந்த கட்டண உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது.
இதனை தொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த திமுகவின் அறிக்கையை வழங்கினார்.