திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்

திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்
DMK Party officially announced MK Stalin as its leader

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு கூட்டம் துவங்கியதும், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்.

திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

DMK Party officially announced MK Stalin as its leader