தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி
DMK Leader Karunanidhi to meet his followers

சென்னை: உடல் நலமில்லாத காரணத்தினால் தி.மு.கவின் தலைவர் கருணாநிதி, கட்சி தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து, தன்னுடைய இல்லத்தில் சில மாதங்களாக ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில், கருணாநிதி தனது பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தொண்டர்களை சந்திக்கிறார் எனவும், இதற்கான விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் என்று தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் தி.மு.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

DMK Leader Karunanidhi to meet his followers