தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது: ராகுல் காந்தி திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர்.

பின்னர் ராகுல்காந்தி பேசியதாவது,

அனைத்து தரப்பினரின் விருப்பங்களையும் பூர்த்திசெய்யும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும். 5 முக்கிய அம்சங்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 2022ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 22 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்

* தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படாது. நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும். மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்துகிறது.

*  தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை .

* இலங்கையுடன் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும்.

* நிதி ஆயோக் அமைப்பு கலைக்கப்படும்.

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக அம்மாநில மக்கள் நினைப்பதாலேயே தென்னிந்தியாவில் போட்டியிடுகிறேன். தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை காட்டவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று ராகுல் காந்தி கூறினார்.