கள்ளப் பணம் மற்றும் கடத்தல் தடுப்பு

கள்ளப் பணம் மற்றும் கடத்தல் தடுப்பு

‘கள்ளப் பணம்  மற்றும் கடத்தல் தடுப்பு- பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டிய அவசியம்’  என்ற தலைப்பில்  கருத்தரங்கு

* அரசுக்கு அதிக வருவாய் இழப்பை ஏற்படுத்தும் பொருள்கள் – புகையிலைப்  பொருள்கள் ரூ 9139 கோடிகள், கைபேசிகள் ரூ 6705 கோடிகள், மதுபானம் ரூ 6309 கோடிகள்

* தங்கம், சிகரெட் ஆகியவை அதிக அளவில் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்கள்

சென்னை: எஃப்ஐசிசிஐ கேஸ்கேட் (பொருளாதாரத்தைச் சீரழிக்கும் கடத்தல் மற்றும் கள்ளப் பணத்துக்கு எதிரான குழு) கள்ளப் பணம் மற்றும் கடத்தல் தடுப்பு- பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டிய அவசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கள்ளப் பணம் மற்றும் கடத்தலால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் மற்றும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை ஆகியவை பற்றிக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்ட கடத்தல் பொருள்களுக்கான சந்தை  இந்தியாவில் பெருகி வருவதால் இந்தியத் தொழிற்துறைக்கு இன்றைக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குகிறது.  தொழிற்துறை அமைப்பான எஃப்ஐசிசிஐ பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் முன்னணி தொழில்கள் ஒருங்கிணைப்புடன் இதற்கெனப் பிரத்யேகமாக ‘கேஸ்கேட்’ என்னும் குழுவை உருவாக்கி உள்ளது. 

எஃப்ஐசிசிஐ கேஸ்கேட் ஆய்வறிக்கையின்படி, ஏழு தயாரிப்புத் துறைகளை உள்ளடக்கிய கள்ளச் சந்தைகள் காரணமாக அரசுக்கு 2014இல் ஏற்பட்ட இழப்பு ரூ 39,239 கோடிகள்.  பல்வேறு துறைகளுள் ரூ 9139 கோடிகள் அளவில், அரசுக்கு அதிக வருவாய் இழப்பை கள்ள வர்த்தம் மூலம் ஏற்படுத்தியது புகையிலைப் பொருள்களே ஆகும். இதனைத் தொடர்ந்து ரூ 6705 கோடிகள் மதிப்பில் கைபேசிகள் மற்றும் ரூ 6309 கோடிகள் மதிப்பில் மதுபானங்கள் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

அதிக வரிகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான பொருள்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிக வரிகள் விலை குறைந்த மற்றும் போலியான பொருள்களுக்கான தேவையை அதிகரித்துக் கள்ளச் சத்தைகள் பெருகக் காரணமாகின்றன. அதிக வரிகள் கள்ளச் சந்தையில் ஈடுபடுவோருக்கு ஒரிஜினல் பொருள்களின் போலிகளைக் குறைந்த விலையில் விற்க வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.

தமிழகத்தின் நீண்ட கடற்கரை காரணமாக நீண்ட காலமாகவே கடத்தல்காரர்களின் சொர்க்கமாக விளங்கி வருகிறது. ஆய்வறிக்கையின்படி  தமிழகத்தில் அதிக அளவில் கடத்தப்பட்ட தங்கம், சிகரெட் ஆகியவை கடந்த சில மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் ஆயத் தீர்வை, சுங்கத் தீர்வை, காவல் துறை, மாநில அமலாக்கத் துறை ஆகியவை தங்கம், சிகரெட் உள்ளிட்ட பொருள்களைக் கள்ளத்தனமாகத் தமிழகத்தில் கடத்தியவர்கள்  மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.  2018 பிப்ரவரியில் ரூ 9 கோடி மதிப்புள்ள இந்தோனீஷிய சிகரெட் (குடாங்க கரம்) சென்னைத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய பெரிய நகரங்களில் மட்டுமின்றிச் சிறிய நகரங்களிலும் அதிரடிச் சோதனைகள் நடைபெற்றன.

அமலாக்கத் துறையின் கண்காணிப்பு அதிகரித்தாலும், இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகத்தில் கைப்பற்றப்பட்ட கள்ளப் பொருள்கள், கடலுக்கு அடியிலுள்ள பனிப்பாறையின் முனையாகச் சின்னஞ்சிறு அளவே ஆகும். 

 ‘சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம்: தீவிரவாதம் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்கான நிதி ஆதாரம்’  என்ற தலைப்பில் எஃப்ஐசிசிஐ வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கையின்படி 2016இல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈராஃ. ஆஃப்கானிஸ்தான் நாடுகளைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.  குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் (யுஎன்சிசிபிசிஜெ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகளவில் தீவிரவாதம் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களுக்கு கள்ளப் பணம் இரண்டாவது முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது என்று தெரிவிக்கிறது.  தீவிரவாதிகள் தங்கள் குற்றச் செயல்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்ட கள்ளத்தனமாகப் பொருள்களைத் தயாரித்து அவற்றை எல்லைப் பகுதிகளில் கடத்துகின்றனர். இதுபோன்ற கள்ள மற்றும் திருட்டுத்தனங்களால் உலகளவில் 2013இல் வேலை இழந்தோர் எண்ணிக்கை 2 முதல் 2.6 மில்லியன் மக்கள். இது 2022இல் 110% அதிகரித்து 4.2 முதல் 5.4 மில்லியன்களாக உயரும் என்று கணித்துள்ளனர்.

எஃப்ஐசிசிஐ கேஸ்கேட் ஆலோசகர் மற்றும்  ஆயத்துறை & சுங்கத் துறை மத்திய வாரியத்தின் முன்னாள் தலைவர் பி சி ஜா கூறுகையில் ‘நாம் பொதவாக நினைப்பதை விடவும் சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம் மிகத் தீவிரப் பிரச்சினையாகும்.  நாட்டின் பாதுகாப்பு,பொருளாதாரம், வருவாய், சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் ஆகியவை மீது கடுமையான விளை