கல்லூரி மாணவியை கொன்றது கணவனா?

கல்லூரி மாணவியை கொன்றது கணவனா?
College student Ashwini killed by her husband says police

சென்னை: சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலுக்கு எதிரே உள்ள தெருவில் வைத்து அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தினார், இதனால் மாணவி அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அங்குள்ளவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணையில் கூறுவதாவது:

காதலர்களான (அஸ்வினி, அழகேசன்) இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளனர். பின்னர், அஸ்வினியின் தாயார் எதிர்ப்பு காரணமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் வைத்து இருவரும் கடிதம் எழுதிக்கொடுத்து பிரிந்து சென்றதாக போலீசார் கூறியுள்ளனர்.

இருந்தாலும், அஸ்வினியை அவர் தினமும் சந்தித்து பேச முயன்றுள்ளார். அதில் தோல்வி அடைந்த நிலையில், அவரை கொல்லும் முடியை அழகேசன் எடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

College student Ashwini killed by her husband says police