சென்னை மாணவி அஷ்வினி படுகொலை

சென்னை மாணவி அஷ்வினி படுகொலை
Chennai college girl Ashwini murder

சென்னை: சென்னை கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலில் வைத்து வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய நபரை அங்குள்ளவர்கள் சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கொலை செய்த நபர் மதுரவாயலைச் சேர்ந்த அழகேசன் (28) என்பது தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் அழகேசன் தொல்லை கொடுப்பதாக அஸ்வினி அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அவர் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஷ்வினி ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Chennai college girl Ashwini murder