தி சென்னை சில்க்ஸ்

தி சென்னை சில்க்ஸ்
Chennai Silks apologizes for fire accident

தி சென்னை சில்க்ஸ் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த புதன்கிழமை (31/05/2017) அன்று எங்களது சென்னை தி.நகர் கிளையில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு வருத்தம் தெரிவித்து, நாங்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சம்பவத்தால் தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு பெரிதும் வருந்துகிறோம்.

மேலும் எங்களது தி.நகர் ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் வாடிக்கையாளர்கள் தங்களின் மாதாந்திர Chit பற்றிய விபரங்களை எங்களது வேளச்சேரி (சென்னை) ஸ்ரீ குமரன் தங்க மாளிகை கிளையில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். (Contact No. 7358042342)"

Chennai Silks apologizes for fire accident