ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து
Chennai RK Nagar bypoll cancelled by Election commission

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகாரைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சமர்ப்பித்த பணப்பட்டுவாடா தொடர்பான அறிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஸைதி 2 ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், வருமான வரித்துறை மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவின் அறிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும், இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அறிவித்தது.

நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது.

Chennai RK Nagar bypoll cancelled by Election commission