சென்னை மெட்ரோ ரயில் மாதாந்திர பாஸ் அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் மாதாந்திர பாஸ் அறிமுகம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது, அதன் படி 150 ரூபாய்க்கு ஒருநாள் பயண அட்டையை அறிவித்தது. 

தற்போது 2500 ரூபாய்க்கு மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 50 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். இந்த மாதாந்திர பயண அட்டை மூலம் ஒரு மாதம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் பயணம் செய்யலாம்.