கொரோனா குறித்து ஐஐடி செய்த ஆய்வின் தகவல்
வெப்பநிலை குறைந்த இடங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் என்று ஐஐடி செய்த ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடி பேராசிரியர் சச்சின் குந்தே தலைமையிலான குழு செய்த ஆய்வு முடிவுகள் வெளியிட்டப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கையாக புற ஊதா கதிர்வீச்சை உருவாக்கினால் சமூல பரவலை தடுக்கலாம் என்று ஐஐடி தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 1.7 லட்சம் பேரின் தரவுகளை ஆராயந்த முடிவுகளை ஐஐடி வெளியிட்டுள்ளது.
தரவுகளை மட்டுமே ஆராய்ந்திருப்பதால், உடலியல் ஆய்வை முன்னெடுத்த பின்பே நிரூபணம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.