சென்னை ஆவடியில் கணவன், மனைவி கொலை

சென்னை ஆவடியில் கணவன், மனைவி கொலை

சென்னை: சென்னை ஆவடி அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன், இவருடைய மனைவி விலாசினி இருவரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர், இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த கணவன், மனைவியை வீட்டுவேலைக்கு செய்வதற்காக நியமித்துள்ளனர்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது கணவன் - மனைவி ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்ட வேலைக்காரர்களும் இல்லாததால் பணம், நகையை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த விலாசினி ஜெகதீசனின் இரண்டாவது மனைவி ஆவார். முதல் மனைவி சுகுமாரி சென்னை அண்ணா நகரில்  வசித்து வருகிறார், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர், விலாசினிக்கு குழந்தைகள் இல்லை.