இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Champions Cup Cricket 2017 India beat Bangladesh

வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பர்மிங்காம்: இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் அரையிறுதி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது.

"டாஸ்" வென்ற இந்திய அணி முதலில் வங்காளதேசத்தை பேட்டிங் ஆட அழைத்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் (70 ரன், 82 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), முஷ்பிகுர் ரஹிம் (61 ரன், 85 பந்து, 4 பவுண்டரி) எடுத்தனர்.

பின்பு 265 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 265 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்தியாவின் தரப்பில் ரோகித் சர்மா 123 ரன்களுடனும் (129 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோலி 96 ரன்களுடனும் (78 பந்து, 13 பவுண்டரி) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, லண்டன் ஓவலில் நாளை மறுதினம் (ஜூன் 18) நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Champions Cup Cricket 2017 India beat Bangladesh