கலர்ஸ் தமிழில் அறிமுகமாகும் புதிய நெடுந்தொடர் “மைனா”

கலர்ஸ் தமிழில் அறிமுகமாகும் புதிய நெடுந்தொடர் “மைனா”

பிரைம்டைம் நிகழ்ச்சியாக பார்வையாளர்களை பரவசப்படுத்த வருகிறது

* 2019, ஜுன் 10 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு  ஒளிபரப்பாகிறது*

சென்னை, 6 ஜுன், 2019: விடுதலைப் பெறுவதற்கான ஒரு தீவிர போராட்டத்தில் மனதை என்னவோ செய்யும் உணர்வுகளின் சங்கமத்தை காட்சிப்படுத்தும் வகையில் மைனா என்ற நெடுந்தொடர் தொடங்கப்படுவதை கலர்ஸ் தமிழ் அறிவித்திருக்கிறது.  மன உறுதியும், தைரியமும் கொண்ட ஒரு இளம் சிறுமியின் கண்ணோட்டத்திலிருந்து கொத்தடிமை தொழில்முறை என்ற கொடுமையான அடக்குமுறையின் பல்வேறு பரிமாணங்களை இந்த கதை பார்வையாளர்களுக்குப் படைக்கிறது.  2019 ஜுன் 10 ஆம் தேதியன்று முதன்முறையாக ஒளிபரப்பப்படவுள்ள இப்புதிய நிகழ்ச்சியானது, நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறுகின்ற கடும் யுத்தத்தில் மைய சக்தியாக உருவெடுக்கிற ஒரு 7 வயது சிறுமியின் வாழ்க்கைப் பயணத்தை பின்தொடர்கிறது. 21 ஆவது நூற்றாண்டிலும் நமது நாட்டில் இன்னும் பரவலாக பல்வேறு வடிவங்களில் பின்பற்றப்பட்டு வருகின்ற கொத்தடிமை தொழில்முறை என்ற மிகக் கொடுமையான ஒரு சமூகப் பிரச்சனையைக் கருப்பொருளாக கொண்ட “மைனா”, வறுமையின் கொடுமையில் சிக்கிய ஒரு குடும்பத்தின் போராட்டங்களையும், உணர்ச்சி கொந்தளிப்புகளையும் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துகிறது.  இன்னும் பிறக்காத குழந்தையை வாங்கிய கடனுக்கு பிணையாக வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் கொடுமையின் உச்சக்கட்டத்திலிருந்து பயணிக்கும் ஒரு இளம் சிறுமியின் வாழ்க்கை கதை, கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதிதாக ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர் நிகழ்ச்சியான மைனா, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த எண்ணற்ற குடும்பங்களை கொத்தடிமை தொழில்முறை என்ற புதை மணலுக்குள்  சிக்க வைக்கின்ற சமூக – பொருளாதார  இடைவெளி மற்றும் பாகுபாட்டின்  இயக்கவியல் அம்சங்களை நேர்த்தியாக சித்தரிக்கிறது.  ஒவ்வொரு நாளும் நீண்ட நேரங்களாக கடும் வெயிலிலும், மழையிலும் செய்ய வேண்டிய வேலைப்பளு, சிரமங்கள் மற்றும் செல்வாக்குள்ள அதிகார வர்க்கத்தினரின் யதேச்சதிகார போக்குகளை கொத்தடிமையில் சிக்கியிருக்கின்ற குடும்பங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சூழலில் விடுதலைக்கான ஒரு வாக்குறுதியாக மைனா  பிறக்கிறாள்.  அநீதி மற்றும் அடிமைத்தன சமூக கட்டமைப்பில் பிறந்து வளர்கின்ற மைனா மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகரும், பணக்கார நிலச்சுவாந்தாருமான சிங்கப்பெருமான் என்ற பெரிய மனிதரை எதிர்கொள்ள தனக்கே உரிய உறுதியான, ஆனால் மனதை வசப்படுத்துகின்ற தன்மையான வழிமுறையில் மைனா காட்டுகின்ற தைரியம் மற்றும் தோல்விகளையும், தடைகளையும் புறம்தள்ளி மீண்டெழுகின்ற உத்வேக உணர்வை இந்த கதை பிரதிபலிக்கிறது. 

கலர்ஸ் தமிழில் பிசினஸ் ஹெட் திரு. அனூப் சந்திரசேகரன் இந்த புதிய நிகழ்ச்சி குறித்து பேசுகையில், கொத்தடிமை தொழில்முறை என்பது, நம் நாட்டில் ஒரு தேசிய பிரச்சனையாகும்.  இந்த 21-வது நூற்றாண்டிலும் இது இன்னும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண பல்வேறு தரப்பினரிடமிருந்து அக்கறையும், செயல் நடவடிக்கையும் அவசியமாக இருக்கிறது.  மைனா வழியாக கடும் துயர்களை தொழிலாளர்கள் அனுபவிக்கின்ற இத்தகைய தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களையும், போராட்டங்களையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட ஒரு உந்து சக்தியாக செயல்பட நாங்கள் விழைகிறோம்.  வாழ்க்கையில் சவால்களை வெற்றிகரமாக கடந்து, முன்னேறுவதற்கு மிகப்பெரிய அளவில் தைரியமும், தோல்விகளினால் துவண்டுவிடாமல் மீண்டெழுகின்ற உணர்வும், மனஉறுதியும் தேவைப்படுகிறது.  கலர்ஸ் தமிழ் அலைவரிசை தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, தமது தொடர்களில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரங்கள் இதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  இன்றைய தினம் கலர்ஸ் தமிழ் குடும்பத்திற்கு வயதில் மிகச்சிறிய, ஆனால் மிக தைரியமான மைனாவை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்த சிறுமி அவளது நடிப்புத் திறனால் மனதை உருக்கும் இந்த கதையை தன் தோளில் சுமக்கப்போகிறாள்.  ஒன்றும் அறியாத அப்பாவித்தனம், வாழ்க்கையின் யதார்த்தங்களை உணர்வு, நம்பிக்கை, விடுதலை மற்றும் சாதனை என மைனா அவளது பயணத்தில் கடக்கும் ஒவ்வொரு நிலைகளிலும் மைனாவோடு நமது பார்வையாளர்களும் இணைந்து பயணிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

மைனா நெடுந்தொடரின் இயக்குனர் திரு. நித்தியானந்தன் பேசுகையில், “மைனா, வெறும் ஒரேயொரு சிறுமியின் கதையல்ல. இந்த நவீன உலகில் கொத்தடிமை தொழில்முறையின் சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவித்து, சுதந்திரக்காற்றை சுவாசிக்க போராடுகின்ற எண்ணற்ற நபர்களின் கதை.  சக்தி வாய்ந்த கதைக்களத்தைக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது, அநீதியை எதிர்த்துப் போராடுகின்ற மனஉறுதி மற்றும் தைரியத்தின் உணர்வலைகள் நிறைந்த ஒரு பயணத்தில் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும்.  சிங்கபெருமாளுடனான தனது யுத்தத்தில் மைனாவின் போராட்ட குணமும், அதே வேளையில் மகிழ்ச்சியைப் பரப்புகின்ற அவளது குணவியல்பும் பார்வையாளர்கள் மனதில் அவளுக்கு நிச்சயமான ஒரு இடத்தைப் பெற்றுத் தரும்.  வழக்கமான விஷயங்களிலிருந்து மாறுபட்டு, மனஉறுதியோடு வாழ்க்கையின் போராட்டங்களை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் சாதிக்கின்ற ஒரு உத்வேகமளிக்கும் கதையாக இது இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

7 வயது சிறுமியான மைனா கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யதர்ஷினியோடு, விஸ்வரூபம் திரைப்படத்தில் புகழ்பெற்ற முக்தார் கான், மைனாவில் வில்லனான சிங்கப்பெருமாள் கதாபாத்திரத்தில் கலக்குகிறார்.  அத்துடன், மைனாவின் தந்தையான கந்தசாமி என்ற பாத்திரத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகர் ரஞ்சித் மற்றும் மைனாவின் தாயார் கஸ்தூரியாக ஸ்ரீவாணி ஆகியோரும் நடிக்கின்றனர்.  

துயரங்களிலிருந்து மீண்டுவர தைரியம் மற்றும் விடுதலை என்ற மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான கதைக்களத்தைக் கொண்டுள்ள மைனாவின் மூலம் இந்த ஜுன் மாதத்தை உற்சாகமாக அனுபவியுங்கள்.  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி 2019 ஜுன் 10 ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகும்.  இந்த அலைவரிசையானது அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும், அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553).  ஏதாவது ஒரு எபிசோடை காண தவறவிட்டுவிட்டீர்களா? கவலை வேண்டாம்.  உங்கள் மனதிற்குப் பிடித்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் காண Voot – ஐ டியூன் செய்யுங்கள்.