ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிரடி சோதனை
CBI raid on Chidambaram and Karthi Chidambaram residency

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, காரைக்குடி, உள்பட சிதம்பரத்திற்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடித்தி வருகின்றனர்.

எதற்காக இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறித்த எந்த தகவலையும் சிபிஐ வெளியிடவில்லை.

CBI raid on Chidambaram and Karthi Chidambaram residency