கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை கவுரவித்த "பூஸ்ட்" நிறுவனம்

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை கவுரவித்த "பூஸ்ட்" நிறுவனம்

சென்னை: ஊட்டச்சத்து பான விற்பனை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஜிஎஸ்கேவின் பூஸ்ட், அதன் விளம்பரத் தூதுவரான எம்.எஸ்.தோனிக்கு மாபெரும் தனித்துவமான மணற் சிற்பத்தை வடித்து பெருமைப் படுத்தியுள்ளது. இது தோனி, கிரிக்கெட் விளையாட்டுக்கு அளித்த பங்களிப்புக்கும், அவர் பூஸ்ட் நிறுவனத்துடன் கொண்டுள்ள நீண்ட கால உறவுக்குமான புகழாரம் ஆகும். இந்த பிரத்யேக மணற் சிற்பத்தை புகழ்பெற்ற கலைஞர் மானஸ் சாஹூ சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் உருவாக்கியுள்ளார்.

எல்லோராலும் அன்புடன் 'தல' என்றழைக்கப்படும் எம்.எஸ்.தோனி, எப்போதுமே இளம் வீரர்களை பெரிதினும் பெரிதாக விளையாட ஊக்குவித்திருக்கிறார். சில நேரங்களில் அந்த ஊக்குவிப்பு அவருடைய தலைமைப் பண்பிலிருந்து வெளிப் பட்டிருக்கும். சில நேரங்களில் அது கிரிக்கெட் மைதானத்தில் அவர் வெளிப்படுத்தும் சுவாபத்தால் வெளிப்பட்டிருக்கும். அவற்றைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்த மணற் சிற்பம்தான் தோனி போன்ற இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கும் விளையாட்டு வீரருக்கு செய்யக்கூடிய சரியான புகழாரமாக அமையும். தங்கள் ஹீரோவுக்கு பூஸ்ட் நிறுவனம் சூட்டும் புகழாரத்தை காண நிகழ்விடத்தில் தோனி ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். 

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்.எஸ்.தோனியின் சிறப்பம்சமான ஹெலிகாப்டர் ஷாட்டை அவரது குட்டி ரசிகர்கள் அங்கேயே ஒரு கை பார்க்க பயிற்சி வலை அமைக்கப்பட்டிருந்தது. தோனி, இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதை எப்போதுமே உயர்த்திப் பிடிக்கும் பாரம்பரியம் கொண்டவர். அவரது பாணியில் பூஸ்ட் மணற் சிற்பம் அமைக்கப்பட்ட இடத்தருகே வலை பயிற்சிக்காக ஏற்பாடு செய்திருந்தது, பெரிய வெற்றிகளுக்காக எப்போதும் பூஸ்ட் ஊக்குவிக்கும் என்பதை உணர்த்துவதற்கான ஓர் ஆகப் பொருத்தமான முன்னுதாரணம் என்றே சொல்ல வேண்டும். 

இந்த நிகழ்ச்சி குறித்து GSKCH நிறுவனத்தின் இந்திய துணைக் கண்டத்துக்கான விற்பனைப் பிரிவு தலைவர் விக்ரம் பால் கூறும்போது, "பூஸ்ட் என்றால் உடல்வலிமை, புத்துணர்ச்சி, வெற்றிக்கான மனப்பாங்கு என்று பொருள் கொள்ளும் அளவுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இப்போது, தோனிக்கு இத்தகைய புகழாரம் சூட்டியதன் மூலம், அவரின் வெற்றி நாடியை, கிரிக்கெட் விளையாட்டுக்கு அவர் சேர்க்கும் புத்துணர்ச்சியை நாங்கள் கொண்டாடுகிறோம். அவரைப் போன்றதொரு சாம்பியன் பூஸ்ட் அமைப்பில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் எங்கள் பிராண்டின் உணர்வுகளை பிரதிபலிப்பவராக இருப்பதிலும், லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருப்பதிலும் எங்களுக்குப் பெருமிதம்" என்றார்.