பெங்களூரு அப்போலோ மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக 100 ரோபோ இருதய அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து சாதனை!
பெங்களூரு அப்போலோ மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக 100 ரோபோ இருதய அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து சாதனை!
ரோபாடிக் காம்ப்ளக்ஸ் மிட்ரல் வால்வு பழுது நீக்கும் சிகிச்சையை 70 நிமிடங்களில் செய்து முடித்து சாதனை!!
செப்டம்பர் 6 2021 :பெங்களூரு அப்போலோ மருத்துவமனை ரோபோ உதவியுடன் கூடிய இருதய அறுவை சிகிச்சை பிரிவில் 100 அறுவை சிகிச்சைகளை செய்து முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் இருதய அறுவை சிகிச்சை வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆகும். மருத்துவர்கள் குழு மிகவும் சிக்கலான மிட்ரல் வால்வு அறுவை சிகிச்சையை (Complex Mitral Valve surgery)ரோபோ உதவி மூலம் குறைவான அறுவை முறைகள் மூலமாக வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது. டாவின்சி ரோபோட்டிக் சிஸ்டம் (da Vinci robotic system) என்ற முறையை பயன்படுத்தி70 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்த அறுவை சிகிச்சைகளை செய்து முடித்துள்ளது. இருதயவியல் சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாகும்.
மூத்த ஆலோசகரும், இருதயவியல் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரும், ரோபோட்டிக் இருதய அறுவை சிகிச்சை பிரிவின் தலைவருமான சத்யாகி நம்பாலா (Dr. Sathyaki Nambala, Sr. Consultant, Cardiothoracic and Vascular Surgeon and HoD, Robotic Cardiac Surgery Unit) கூறுகையில், இந்த இருதய நோய்கள் மக்கள் தங்கள் வாழ்க்கையில் பொருள் சேர்க்கும் வயதில் தாக்குகிறது. இது அவர்களின் பொருளாதார, சமூக நிலையில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது. ரோபோ உதவியுடனான இருதய அறுவை சிகிச்சை அளிப்பதற்கு பெருமளவிலான அர்ப்பணிப்பும் தயாரிப்புப் பணிகளும் அவசியமாகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில்இத்திட்டம் தொடங்கியதிலிருந்தே இம்முறையில் 100 அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்த, நாட்டின் முதல் மருத்துவமனை நாங்கள் என்பதில் பெருமை அடைகிறோம்” என்றார்.
மரபு முறை அறுவை சிகிச்சையான இருதயத்தை கீறி பிளந்து மார்பெலும்புகளை பிரித்து செய்யும் அறுவை சிகிச்சை முறையோடு ஒப்பிடும் போது, புதுமையான தொழில் நுட்பமான டாவின்சி முறையானது சிக்கலான கார்டியோ வாஸ்குலர் அறுவை சிகிச்சைகளை மிகவும் குறைவான கீறல் மற்றும் துல்லியத்தன்மையுடன் செய்ய அனுமதிக்கிறது.
மேலும் அவர் கூறுகையில், “அதனுடன் உயர் தர கேமரா, இருதயத்தின் துல்லியமான, முப்பரிமாண காட்சியை அறுவை சிகிச்சை நிபுணருக்கு தெரியும் வகையில் திரையில் தெளிவாக காட்டுகிறது. எனவே இந்த தொழில் நுட்பத்தின் உதவியுடன், சர்வதேச திறன்களுக்கு நிகராக, நாங்கள் வெற்றிகரமாகவும், வேகமாகவும் ரோபோடிக் காம்பளக்ஸ் மிட்ரல் வால்வு பழுதை 70 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் சரி செய்ய முடிந்தது. எதிர்காலத்தில் இந்த திசையில் இன்னும் பல சாதனைகளை விரைவிலேயே எட்டுவோம் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
திறந்த நிலையிலான இருதய அறுவை சிகிச்சையைக் காட்டிலும்ரோபோ இருதய அறுவை சிகிச்சையானது குறைவான காயத்தையே உருவாக்குவதால் நோயாளிகள் விரைவாகவே தினசரி இயல்பு வாழ்க்கு திரும்ப ஏதுவாகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் போர்ட்ஸ் எனப்படும் 8 மிமீ துளைகள் வாயிலாகவும், பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண துல்லிய காட்சி வாயிலாகவும், அதைப் போலவே அறுவை சிகிச்சைகளின் போது மனித கரங்களை விட எளிதாக வளையவும், சுழலவும் கூடிய சிறிய இயந்திரக் கைகளைக் கொண்டும், டாவின்சி தொழில் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். இதன் பயனாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிறப்பான காட்சி, துல்லியம், நிதானம் ஆகியவற்றை பெற முடிகிறது. இதன் மற்றொரு பயனாக குறைவான வலி, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய குறைவான காயத்தின் மீதான கிருமி தொற்றுகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய குறைவான வடுக்கள், மூச்சு விடுவதில் முன்னேற்றம் ஆகியன கிடைக்கின்றன. மேலும் விரைவாக உடல் குணமடைவதால் குறைவான மருத்துவ பராமரிப்புக் காலத்திலேயே விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப ஏதுவாகிறது,
கிருமி தொற்றுக்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கான சிறப்பான முறையாக இது உள்ளது.
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர். சங்கீதா ரெட்டி (Dr. Sangita Reddy, Joint Managing Director, Apollo Group of Hospitals) கூறுகையில், ‘’ இந்தியாவில் உள்ள எங்களது நோயாளிகள் பயன்பெறும் வகையில் மிகவும் அதி நவீன தொழில் நுட்பத்தை எப்போதும் கொண்டு தர வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. மிகவும் மேம்பட்ட அறுவை மற்றும் சிகிச்சை உபகரணங்கள் வாயிலாக மேலும் அதிக அளவிலான நோயாளிகள் பயன்பெறும் வகையில் எங்களது மருத்துவமனையில் அவற்றை கிடைக்க செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். டாவின்சி சர்ஜிக்கல் சிஸ்டம் அறுவை சிகிச்சையில் பல நல்ல விளைவுகளை உருவாக்கியுள்ளது. மேலும் எங்களது நோக்கமான எங்களது நோயாளிகளுக்கு தரமான உயர்தர சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதற்கு சான்றாக, 100-க்கும் மேற்பட்ட ரோபோ இருதய அறுவை சிகிச்சையை நாங்கள் நிறைவு செய்யவும் அது உதவியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை எளிதில் எங்களது நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டும் என உளப்பூர்மாக நாங்கள் முயற்சி மேற்கொள்வதுடன், எங்கள் இலக்கை நோக்கிய பயணத்துக்கு மேலும் ஒரு முன் அடி வைப்பாக டாவின்சி சர்ஜிக்கல் சிஸ்டம் அமைந்துள்ளது. ரோபோ முறையில் 100 அறுவை சிகிச்சை மேற்கொண்டதோடு அதை 70 நிமிடங்களுக்குள் செய்து முடித்துள்ளோம் என்ற இரட்டை சாதனையை நாங்கள் எட்டியிருக்கிறோம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வழக்கமான இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத ஏராளமான நோயாளிகளின் வாழ்க்கையில் நாங்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.
இது குறித்து Intuitive Indiaநிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான மன்தீப் சிங் குமார் (Mandeep Singh Kumar, VP and General Manager, Intuitive India)கூறுகையில், ’’ஆச்சரியப்படத்தக்க வகையிலான 100 ரோபோ இருதய அறுவை சிகிச்சைகளில் பங்கேற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது Intuitive Indiaநிறுவனத்தை பொறுத்தவரையில் சிக்கலான செயல்பாடுகளில் அறுவை சிகிச்சை நிபுணர் திறனை மேம்படுத்தவும் சிகிச்சைக்கான விளைவுகளில் முன்னேற்றம் காணவும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட வேண்டும், என நாங்கள் நம்புகிறோம். ரோபோ உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாவின்சி முறையில் உள்ள அதன் துல்லியத்தன்மை, காண்பதில் மேம்பாடு, இலகுத்தன்மை, சிகிச்சைக்கு பிறகான விளைவுகளில் ஏற்படும் நல்ல பயன்களை தரும் அதன் திறன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உறுதி கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். சிகிச்சைக்கான வாய்ப்புகளில் ரோபோ இருதய அறுவை சிகிச்சை அளிக்கும் சேவை கொண்ட உலகின் மிக சில மருத்துவமனைகளில் பெங்களுர் அப்போலோ மருத்துவமனையில் உள்ள மிகவும் அர்ப்பணிப்புடன் கூடிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். டாக்டர் சத்யகியின் நிபுணத்துவத்துடன் இணைந்து அப்போலோ மருத்துவமனையும், அதன் குழுவினரும் அளித்து வரும் உலகத் தரத்திலான, மிகவும் குறைவான சேதத்துடன் செய்யப்படும் இருதய அறுவை சிகிச்சை உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த ஏற்பாடு ஆகும். மேலும், தொழில் நுட்பத்தை பயன்படுத்த தரமான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற அப்போலோ தற்போது மேற்கொண்டு வரும் பொறுப்புணர்வுமிக்க சேவை மிகவும் பாராட்டத்தக்கதாகும். மிகச் சிறந்த வாடிக்கையாளர் சமூகத்தை உருவாக்கும் வகையில் அப்போலோ குழுமத்துடன் இணைந்து ரோபோ முறையிலான அறுவை சிகிச்சை அளிப்பதற்காக உண்மையிலேயே நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்” என்றார்.
இந்தியாவில் மரணங்களை ஏற்படுத்துவதில் புற்று நோயை காட்டிலும் இருதயம் தொடர்பான கோளாறுகள் (Cardiovascular diseases (CVDs)) முன்னணியில் உள்ளன. இந்தியாவில் இந்த தொற்றுநோயியல் (epidemiological) மற்றும்இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான அபாயத்துக்கான அம்சங்களை அதிகரிக்கச் செய்வதற்கான முக்கியமான காரணிகளாக மாறியுள்ளது. ஆய்வுகளின் படி, கடந்த 2016-ல் இந்தியாவில் இருதயம் தொடர்பான கோளாறுகள் 54.5 மில்லியன் பேருக்கு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருதய கோளாறு இந்தியாவில் 4 -ல் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது. அவற்றில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோரை இருதய ரத்த ஓட்ட பாதிப்பு மற்றும் பக்க வாதம் ஆகியன இந்த அபாயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
லான்செட் குளோபல் ஹெல்த் மேற்கொண்ட ஆய்வின்படி, உலகில் உள்ள பல்வேறு வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களை காட்டிலும், இருதய கோளாறு பரிசோதனைகளுக்கு பிறகு அதன் காரணமாக இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. ஆய்வின்படி,இருதய கோளாறு தொடர்பான பரிசோதனை மேற்கொண்ட ஒராண்டுக்குள் இந்தியாவில் இதயம் பாதிப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 23 சதவீதமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதே போல் ஒப்பீட்டளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தென்கிழக்காசியா (15%) சீனா (7%), தென் அமெரிக்கா (9%) மேற்கு ஆசியாவில் (3%) போன்ற நாடுகளை விட அதிகமாகவும் காணப்படுகிறது. அதே போல் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியா (9%) வில் 10 வயதிற்கு குறைவானவர்கள் இருதய கோளாறுகளால் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளதும் ஆய்வின் படி தெரியவந்துள்ளது.
சிக்கலான இருதய பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு மிகச் சிறந்த இருதய சிகிச்சையை அப்போலோவில் உள்ள ரோபோ உதவியுடன் கூடிய இருதய அறுவை சிகிச்சை பிரிவு வழங்குகிறது.மூத்த ஆலோசகரும், இருதயவியல் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணரும், ரோபோட்டிக் இருதய அறுவை சிகிச்சை பிரிவின் தலைவருமான சத்யாகி நம்பாலா (Dr. Sathyaki P Nambala, Senior Consultant, Cardio-thoracic and Vascular Surgeon and Head of the Department, Robotic Cardiac Surgery Unit) தலைமையிலான குழுவினர், மிகவும் மேம்பட்ட நான்காம் தலைமுறையைச் சேர்ந்த நவீன பல்திறன் கொண்ட டாவின்சி ரோபோ அறுவை சிகிச்சை முறையுடன் இணைந்த ரோபோ இருதய அறுவை சிகிச்சையை மிகவும் அர்ப்பணிப்புடன் வழங்குகின்றனர்.
அப்போலோ குறித்து:
சென்னையில் இந்தியாவின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனையை டாக்டர் பிரதாப் சி ரெட்டி 1983 இல் தொடங்கினார். தற்போது அது ஆசியாவிலேயே 12 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள், 72 மருத்துவமனைகள், 4100 மருந்தகங்கள், 120க்கும் அதிகமான ஆரம்ப சுகாதார கிளினிக்குகள், 650 பரிசோதனைக் கூடங்கள், 700க்கும் அதிகமான டெலி கிளினிக்குகள், 15-க்கும் அதிகமான மருத்துவ கல்விக் கூடங்கள், உலக அளவிலான ஆராய்ச்சிகளை கவனப்படுத்தும் வகையிலான ஆராய்ச்சி பவுண்டேசன் என ஒரு ஒருங்கிணைந்த நம்பகத்தன்மை கொண்ட முன்னணி சுகாதார சேவை அளிக்கும் குழுமமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மிகப் பெரிய முதலீட்டுடன் புரோட்டான் தெரபி மையம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறையும் அப்போலோ மருத்துவமனை குழுமம் லட்சக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அதை கொண்டு சேர்த்து வருகிறது. மிகவும் போற்றத் தக்க வகையில், சுகாதாராத் துறை வரலாற்றில் முதல் முறையாக அப்போலோவின் இந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசு ஒரு சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
மருத்துவ துறையில் உலகத் தரம் வாய்ந்த மற்றும் புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ சேவை அளிப்பதில் அப்போலோ மருத்துவமனை குழுமம் கடந்த 37 ஆண்டுகளாக முன்னணி இடத்தை வகித்து வருகிறது.