கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக

கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக
BJP makes a big victory in Karnataka election

பெங்களூர்: கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.

தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை தாண்டி 120 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், மஜத 43 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இனி பெரிய அளவில் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அக்கட்சியின் சார்பில் முன்னள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

BJP makes a big victory in Karnataka election