பங்குனி முடிவில் பொங்கிடும் இன்பம் பெற !

பங்குனி முடிவில் பொங்கிடும் இன்பம் பெற !
Astroved March Special Events

பங்குனி முடிவில் பொங்கிடும் இன்பம் பெற ! நேரடியாகவும் நேரலையிலும் பங்குபெறலாம்

ஆனந்தமான அமைதியான வாழ்க்கைக்கு நம்மை வழி நடத்திச் செல்வது ஆன்மிகம். Astroved உங்கள் நன்மைக்காக பல ஹோமங்களையும் வழிபாடுகளையும் நடத்தி வருவது நீங்கள் அறிந்த ஒன்று. இந்த மாத சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றி காண்போம்.

வசந்த நவராத்திரி ; மார்ச் 18-26 வரை 

அகிலத்தை ஆளும் அம்பிகையை ஒன்பது நாள் வழிபட்டு அருள்பெறும் விழாவே நவராத்திரி விழா ஆகும். 12 மாதங்களுக்கும் 12 விதமான நவராத்திரிகள் உண்டு. வாழ்வில் வசந்தம் பொங்க, மனதில் ஆனந்தம் குடிகொள்ள, வசந்த காலத்தில் அதாவது பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவதே நவராத்திரியாகும். இந்தமாதம் அம்பிகையை, பூ (பூமி), புவ (ஆகாயம்), சுவ (சுவர்க்கம்) என்ற மூன்று உலகங்களையும் தன் கட்டுக்குள் ஆளும் புவனேஸ்வரியின் வடிவில் வணங்குவதால் வாழ்வில் தடைகள் எல்லாம் நீங்கி, தைரியம், நம்பிக்கை, படைப்பாற்றல், செல்வம் செழிப்பு என அனைத்தையும் பெற இயலும்.

Astroved நடத்தும் புவனேஸ்வரி ஹோமம், துர்கா அஷ்டோத்திரம் எனப்படும் துர்காவின் 108 நாமாவளிகளைக் கூறி செய்யப்படும் அர்ச்சனை, குங்கும அர்ச்சனை, கேரளாவில் உள்ள ரக்த புஷ்பாஞ்சலி எனப்படும் சிகப்பு நிற பூக்களை கொண்டு செய்யும் ஆராதனை போன்றவற்றில் கலந்துகொண்டு அளவில்லா நலன்களை பெற்று வளமாய் வாழ உங்களை வரவேற்கிறோம்.

ஸ்ரீ ராம நவமி ; 2018 மார்ச் 25

ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களில் 7வது, ராமாவதாரமாகும். தந்தை சொல்லே மந்திரம் என உலகுக்கு உணர்த்தி, ஏக பத்தினி விரதனாய், சத்திய சீலனாய் தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ராமன் அவதரித்த நாளே ஸ்ரீராமநவமி என கொண்டாடப்படுகிறது. ராமநாமம், தாரகமந்திரம் எனப்படும். அந்த தாரகமந்திரம் பாவம் நிறைந்த பவ (உலக) கடலை கடக்க உதவும். ராம நவமி அன்று பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் சொல்லின் செல்வனாம் அனுமனை வழிபடுவதன் மூலம் உடல் மன உறுதி மற்றும் ஆரோக்கியத்தைப் பெற இயலும்.

Astroved நடத்தும் ராம நாம தாரக ஹோமம், ராம நாம அர்ச்சனை, ஹனுமான் அர்ச்சனை, சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்குபெற்று வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற உங்களை வரவேற்கிறோம்.

பங்குனி உத்திரம் ; 2018 மார்ச் 31

தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றதால், பங்குனி உத்திர விரதம், திருமண விரதம் என்றும் கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது. சிவன் பார்வதியை மணந்த நாள், அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, தெய்வானையை திருமணம் புரிந்த முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக இந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாழ்வில் உறவுகள் சிறக்க, திருமண தோஷங்கள் விலக, திருமண உறவு சிறந்திட, பங்குனி உத்திர விரதம் மேற்கொள்வது நல்லது.

Astroved கோவில்களில் நடத்தும் முருகன் அர்ச்சனை, சிவன் பார்வதி அர்ச்சனை, ராதா கிருஷ்ணன் அர்ச்சனை, முருகன் தெய்வானை அர்ச்சனை போன்றவற்றில் கலந்துகொண்டு இறைவன் இறைவியாரின் அருளைப் பெற்று உறவில் நல்லிணக்கம் காணுமாறு உங்களை வரவேற்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு, 

எங்களது இணையதள முகவரி www. astroved.com

Astroved March Special Events