அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன்

அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன்
அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன்

அப்பல்லோ மருத்துவமனையில் ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன் என்ற எலும்புகளைசரி செய்யும் சிக்கலான சிகிச்சை நடைமுறை சிறிய பெண் குழந்தைக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது!

சென்னை, டிசம்பர் 9, 2020:ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனை, ஒரு பெண் குழந்தையைக் காப்பாற்றியதுடன், அக்குழந்தையின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் மற்றொரு சிக்கலான சிகிச்சை நடைமுறையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. டாக்டர் விஜய் கிஷோர் ரெட்டி மற்றும் குழுவினர் டிஸ்காய்டு லேடரல் மெனிஸ்கல் டியர் (Discoid lateral meniscal tear) என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்ட7வயது சிறுமிக்கு திருத்த சிகிச்சை நடைமுறையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இது குழந்தைகளுக்கு ஏற்படும் அசாதாரண நிலைகளில் ஒன்றாகும். 

தங்களது மகளின் நடையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் கவலை அடைந்த, அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியைச் சேர்ந்த பெற்றோர்,செல்வி ஜாய்ஸ்மிதா சாண்டோவைகுவஹாத்தியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். செல்வி ஜாய்ஸ்மிதா சாண்டோ என்ற அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளைப் போலவே நன்றாகவே இருந்து வந்தது. திடீரென வலது முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் நடப்பதில் சிரமம் ஏற்பட்டு வலது முழங்கால் அசைவுகள் பாதிக்கப்பட்டன. முழங்காலில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக கடந்த பல மாதங்களாக அந்தச் சிறுமி தரையில் அமர்வது மற்றும், படிக்கட்டுகளில் ஏறுவது மற்றும் விளையாடுவதற்குச் சிரமப்பட்டார். அந்தச் சிறுமியால் தமது அன்றாட பணிகளைக் கூடச் செய்து கொள்ள இயலவில்லை. சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் டிஸ்காய்ட் லேடரல் மெனிஸ்கஸ் டியர்(Discoid Lateral Meniscal Tear)என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. குழந்தைகளுக்கு இந்த அசாதாரண நிலை ஏற்படுவது மிகவும் அரிது. 

மெனிஸ்கஸ் (மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு) என்பது முழங்காலைப் பாதுகாக்கும் வகையில் அதிர்வுகள் மற்றும் அசைவுகளை ஏற்கும் நெகிழ்வு தன்மை வழங்குவதாக. (ஷாக் அப்சர்வர் - shock absorber) செயல்படும் மென்மையான குருத்தெலும்பு (cartilage) ஆகும். ஒவ்வொரு முழங்காலிலும் இரண்டு சி வடிவ பட்டைகள் உள்ளன. அவை பிறை வடிவிலானவை. ஒரு டிஸ்காய்டு மெனிஸ்கஸ், இயல்பை விட தடிமனாகவும் வேறுபட்ட வடிவத்தையும் அமைப்பையும் கொண்டிருக்கும். சாதாரணமான வடிவம் கொண்ட மெனிஸ்கஸை விட இது அதிக அளவில் காயமடைய வாய்ப்புள்ளது. டிஸ்காய்டு மெனிஸ்கஸ் கொண்ட சிலருக்கு எப்போதும் அதில் காயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு இந்த நிலை காரணமாக குழந்தை பருவத்தில் சில பாதிப்புகளுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. பிறக்கும்போது டிஸ்காய்டு மெனிஸ்கஸ் இருந்தால் சிலருக்கு முழங்கால் இயக்கங்களின்போது காயங்கள் ஏற்படக் கூடும். வழக்கமான செயல்பாடுகளின்போது அல்லது விளையாடும்போது முழங்கால் அசைவில் ஏற்படும் மாற்றங்களால் இந்த காய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலை ஏற்பட்டால் பெரும்பாலும் அந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடைமுறை பரிந்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன் (Arthroscopic lateral discoid Meniscus saucerisation)சிகிச்சை முறை செய்யப்பட்டு அதன் மூலம் அந்தக் குறைபாடு சரி செய்யப்பட்டது.  இது கீஹோல் செயல்முறை மூலம் முழுமையாக செய்யப்பட்டது, குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவி இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்தப்பட்டது. 

இந்தப் புரட்சிகரமான சிகிச்சை நடைமுறை குறித்து பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயா கிஷோர் ரெட்டி (Dr. Vijaya Kishore Reddy, Orthopedic Surgeon, Apollo Hospitals)கூறுகையில், “சுறுசுறுப்பாக செயல்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சில நேரங்களில் முழங்கால்களில் கட்டமைப்பு காயங்களால் பாதிக்கப்படக் கூடும். முழங்காலில் அதிர்ச்சி உறிஞ்சியாக (ஷாக் அப்சர்வர்) உள்ள குருத்தெலும்பான மெனிஸ்கஸ் கிழிந்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கடும் வலி ஏற்படும். பெரும்பாலும் இதற்கு ஆர்த்ரோஸ்கோபி எனப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் முறையைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மெனிஸ்கஸ் குருத்தெலும்புகளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சரிசெய்கிறார்கள் அல்லது ஒழுங்கமைக்கிறார்கள். இந்த சிகிச்சை வலியைக் குறைக்கும் மற்றும் காயத்தை குணப்படுத்தும். ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட செல்விஜாய்ஸ்மிதாசாண்டோகுழந்தைக்கு ஏற்கனவே ஒரு அசாதாரண டிஸ்காய்டு மெனிஸ்கஸ் இருந்தது, அது பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்தக் குழந்தை மிகச் சிறு வயது உடைய குழந்தை ஆகும். இந்தியாவில் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் பாதிப்புக்காக முழுமையான கீஹோல் நடைமுறைக்கு உட்பட்ட மிகச் சிறுவயது உடைய குழந்தை இந்தக் குழந்தையே ஆகும். ஏழு மாத துயரத்திற்குப் பிறகு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரே நாளில் தங்கள் குழந்தை சிரமமின்றி நடப்பதை அதன் பெற்றோர் பார்த்து மகிழ்ந்தனர். அடுத்த நாள் அந்தக் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது, எந்தவித சிரமமும் இல்லாமல் அக்குழந்தை தானாகவே மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றது.” என்றார்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி (Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group)கூறுகையில், “எலும்பியல் நடைமுறைகளில் பெரும்பாலானவை தொழில்நுட்ப ரீதியாக அதிக வசதிகள் தேவைப்படும் செயல்முறையாக உள்ளன. இவை ஒரு மருத்துவ மையத்தில் அனுபவம் வாய்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் ஒரு மாதத்தில் பல முறை ஆர்த்ரோஸ்கோபி செய்யப்பட வேண்டிய நிலை கொண்ட சிகிச்சையாகும். இந்த வகை நடைமுறைக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வசதிகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சைக் குழுவினர் இருப்பது மிக முக்கியமானதாகும். அப்பல்லோ மருத்துவமனையைப் பொறுத்தவரை, எங்கள் நோயாளிகள் எல்லா நேரங்களிலும் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிற மருத்துவமனைகளில் வழங்கப்படுவதற்கு இணையாக நவீன மற்றும் மிகவும் புதுமையான சிகிச்சைகளை வழங்குவதில் எங்கள் எலும்பியல் துறை முன்னணியில் உள்ளது.” என்றார்.

கீஹோல் அறுவை சிகிச்சைகள் பற்றி:
எலும்பியல் மருத்துவத்தில் கீஹோல் அறுவை சிகிச்சைகள் (ஆர்த்ரோஸ்கோபி) என்பவை அறுவை சிகிச்சைகள் குறித்த மக்களின் பார்வையை மாற்றி அxமைக்கின்றன. எலும்பியல் அறுவை சிகிச்சைகளின்போது கடந்த காலங்களில் பொதுமக்கள் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை இருந்தது. அப்படி இருந்தபோதும்கூட குணம் அடையும் கால அளவு அதிகமாக இருந்ததால் இந்த அறுவை சிகிச்சைகள் செய்வதில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கை மற்றும் அச்சம் இருந்தது. இது பல நோயாளிகளின் எதிர்காலத்தை முடக்கியதுடன் நோய் மற்றும் வலியால் அவர்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை இருந்து வந்தது. பாரம்பரியமான திறந்த அறுவை சிகிச்சை நடைமுறைகளுடன் ஒப்பிடும்போது கீஹோல் அறுவை சிகிச்சைகள் எளிமையானவை. இந்த கீஹோல் அறுவை சிகிச்சையில் குறைந்த அறுவை சிகிச்சை காயங்கள் மட்டுமே ஏற்படுகின்றன. குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு மற்றும் விரைவான முறையில் குணம் அடைதலை இந்த கீஹோல் அறுவை சிகிச்சை வழங்குகிறது. நோயாளி மருத்துவமனைக்கு வந்து, அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஒரே நாளில் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம். இடுப்பு, முழங்கால், கணுக்கால், தோள்பட்டை, மணிக்கட்டுக்கு ஆகிய பகுதிகளில் குறைபாடுகள் இருந்தால் கீஹோல் அறுவை சிகிச்சைகள் செய்யலாம். இந்த சிகிச்சை நடைமுறையின் மூலமாக எந்தவொரு வலி, காயம் மற்றும் தழும்பு இல்லாமல், நோயாளிகள் தங்களது முந்தைய இயல்பு வாழ்க்கை முறைக்கு முழுமையாகச் செல்ல இயலும். 

அப்பல்லோமருத்துவமனைபற்றி:
1983-ம் ஆண்டுசென்னையில்அப்பல்லோமருத்துவமனைமுதல்கார்ப்பரேட்மருத்துவமனையாகடாக்டர்பிரதாப்ரெட்டியால்தோற்றுவிக்கப்பட்டது. இதுவரைஅப்பல்லோமருத்துவமனைகளில்இந்தியாவிலேயேஅதிகஅளவாக 1,60,000இருதயஅறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. புற்றுநோய்சிகிச்சைஅளிப்பதில்அப்பல்லோமருத்துவமனைஉலகின்மிகப்பெரியதனியார்மருத்துவமனையாகதிகழ்கிறது. உறுப்புமாற்றுசிகிச்சைஅளிப்பதிலும்இந்தமருத்துவமனைஉலகில்முன்னணிமருத்துவமனையாகத்திகழ்கிறது.

ஆசியாவின்மிகப்பெரியமற்றும்மிகநம்பகமானமருத்துவகுழும்மாகஅப்பல்லோகுழுமம்திகழ்கிறது. தற்போது 64 மருத்துவமனைகளில் 9215 படுக்கைகள்உள்ளன. 2500 மருந்தகங்கள், 90 சிகிச்சைமையங்கள்மற்றும்பரிசோதனைக்கூடங்களும் உள்ளன.110-க்கும் மேற்பட்டதொலைமருத்துவமையங்களும் 80-க்கும் மேற்பட்டஅப்பல்லோமுனிச்இன்சூரன்ஸ்கிளைகளும்நாடுமுழுவதும்பல்வேறுஇடங்களில்உள்ளன. 

மருத்துவகாப்பீடுஉட்படஒருங்கிணைந்தமருத்துவசேவைகளைஅப்பல்லோவழங்கிவருகிறது. 15-க்கும் மேற்பட்டமருத்துவக்கல்விமையங்கள்மற்றும்ஆராய்ச்சிஅறக்கட்டளைஆகியவையும்உள்ளன. இவற்றில்பல்வேறுஆராய்ச்சிகள்மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுநிறுவனத்தில்உலகஅளவிலானமருத்துவசேவைசோதனைமுயற்சிகள், ஸ்டெம்செல்ஆராய்ச்சி, மரபணுஆய்வுஉள்ளிட்டபலபணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. அப்பல்லோமருத்துவமனைபலமுன்னணி, நவீனமருத்துவமுறைகளைநடைமுறைப்படுத்துவதில்முதலாவதாகதிகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும்ஆ,ஸ்ரேலியபகுதிகளிலேயேமுதலாவதானப்ரோட்டான்சிகிச்சைமையத்தைசென்னையில்அப்பல்லோமருத்துவமனைநிறுவியுள்ளது. ஒவ்வொருநான்குநாட்களிலும்அப்பல்லோமருத்துவமனைகுழுமம் 10 லட்சம்மக்களைஏதோஒருவகையில்தொட்டுசர்வதேசத்தரத்திலானமிகச்சிறந்தமருத்துவசேவையைஅவர்களுக்குவழங்குகிறது.

For more information: RSVP: Suganthy – 984171 4433 | Adfactors PR:  Aarthi - 9952052429 |Jay S 9940424386