இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிளின் புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர்

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிளின் புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர்
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிளின் புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர்
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆப்பிளின் புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர்

டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இதற்கு முன்னதாக வந்த M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக இந்த புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமின்றி புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. புது மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் இடம்பெற்று இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய M2 சிப்செட் உடன் கூடிய மேக்புக் ஏர் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக இந்த மேக்புக் ஏர் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 900-க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. 2022 மேக்புக் ஏர் மாடல், ஸ்பேஸ் கிரே, லேப்டாப் சில்வர், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.