50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மைல்கல்லை எட்டி சாதனை

50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மைல்கல்லை எட்டி சாதனை

• சர்வதேச தரத்துடன் அதி உன்னத செயல்பாடு

சென்னை, டிசம்பர் 4, 2018:- ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பல் நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனம் (ஏஹெச்இஎல்) (பிஎஸ்இ : 508869) (என்எஸ்இ : APPOLLO HSP) 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. 

சர்வதேசத் தரத்துடன் உன்னத சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இந்த புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சிக்கலான பைபாஸ் அறுவை சிகிச்சைகள், வால்வு மாற்று சிகிச்சைகள், பீடியாட்ரிக்கார்டியாக் நடைமுறைகள், இதயமாற்று சிகிச்சைகள், குறைந்த ஊடுருவல் கொண்ட அறுவை சிகிச்சைகள் என பல தரப்பட்ட அறுவை சிகிச்சைகள் இந்த 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அடங்கும்.

பரவாத நோய்களில் மிகவும் ஆபத்தான நோயாக உள்ள இதய நோய்க்கு எதிராக போராடி வரும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் சி பிரதாப் ரெட்டி கூறுகையில், “தொற்றாத நோய்கள் இன்றைய காலத்தில் மிகவும் ஆபத்தான நோய்களாக உள்ளன. அவற்றில் இதயநோய் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே எழுபது லட்சம் போ் இதய நோய்களால் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதயநோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இது மிகவும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.  இந்த சவால்களை எதிர்கொள்ள விழிப்புணர்வு, தொடக்கத்திலேயே நோயைக்கண்டறிதல், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளுதல் போன்றவை அவசியம் ஆகும். அப்பல்லோ மருத்துவமனை இதயநோய் சிகிச்சையில் முன்னோடியாக இருந்து மைல்கல்லை எட்டியுள்ள இந்தத்தருணம் எங்களுக்கு பெருமைவாய்ந்தது.” என்றார்.

அப்பல்லோவில் 80-களில் ஓப்பன்ஹார்ட் சர்ஜரி மற்றும் கார்டியாக்கேத்த டெரைசேஷன் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டு அவற்றில் இந்த மருத்துவமனை முன்னோடியாகத் திகழந்தது. அதன் பின்னர் பல்வேறு நவீனமருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நோய்கண்டறியும் கருவிகள் பல வந்தன. 

இவை துல்லியமான நோய்கண்டறியும் திறனை வளர்த்ததுடன் சிறந்த சிகிச்சைக்கும் உதவியாக அமைந்துள்ளன. 320 ஸ்லைஸ்சிடிஸ்கேனர், 64 ஸ்லைஸ் சிடி ஆஞ்சியோகிராபி, டிரான்சோசோஃபகேல் எகோகார்டியோகிராபி, ஸ்ட்ரெஸ் எகோகார்டியோகிராபி, எலெக்ட்ரோ பிசியாலஜி போன்றவற்றில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறை கேத்லேப்கள், கார்டியாக்கிரிடிக்கல் கேர்யூனிட், அவசர சிகிச்சைப்பிரிவுகள் போன்றவை வரை முன்னேறி அப்பல்லோ மருத்துவமனை இதயப்பராமரிப்பில் முன்னணியில் உள்ளது. முதல் கரோனரி ஆர்டெரிஸ்டெண்டிங், முதல் கீஹோல்மல்டிபிள் பைபாஸ் அறுவைசிகிச்சை,  இந்தியாவில் முதல் இதயமாற்று அறுவைசிகிச்சை போன்ற நவீன செயல்முறைகளை மேற்கொண்டு மைல்கல்களை எட்டிய சென்னை அப்பல்லோ மருத்துவமனை தற்போது 50 ஆயிரம் அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது அந்த மருத்துவமனைக்கு மற்றுமொரு கிரீடம் ஆகும்.

அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இதயநோய்கள் அறுவைசிகிச்சை பிரிவுத்தலைவர் டாக்டர் எம்.ஆர் கிரிநாத் கூறுகையில்,“அப்பல்லோ மருத்துவமனை, மிகச்சிறந்த அனுபவம் உள்ள, அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய இதய நோய் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் சர்வதேசத்தரத்துடன் அதிநவீன சிகிச்சை நடைமுறைகளை வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இதயநோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சைஅளித்து வரும் மருத்துவர் என்ற முறையில், இதயநோய்களைத்தடுப்பது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பது எனது கருத்தாகும். ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் நல்லவாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறந்த முறையில் இந்த தொற்றாநோயாக் கட்டுப்படுத்த முடியும்.” என்றார்.

சிகிச்சை முறைகளில் முன்னோடியாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகளால் பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது. அதேசமயம் அப்பல்லோம ருத்துவமனை, உடல் நலப் பரிசோதனைகள் மூலம் இதய நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை முயற்சியிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
வருமுன் காக்கவேண்டியதன் அவசியம் குறித்து அப்பல்லோ மருத்துவமனாகள் குழுமத் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “கார்டியோவாஸ்குலர் எனப்படும் இதயரத்தநாள நோய்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய தேவை, இந்த நோய்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆபத்துக்கான காரணிகளை கட்டுப்படுத்தில் குறிப்பிட்ட காலத்தில் முறையார பராமரிப்புகளை மேற்கொண்டு இதயநோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.  அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கியமான இதய திட்டம் (ஹெல்த்தி ஹார்ட்புரோகிராம்) ஒவ்வொரு தனி நபரும் தங்களது இதய செயல்பாட்டுகளை கண்காணித்து பராமரிக்கலாம்.” என்றார். அப்பல்லோவின் ஹெல்த்திஹார்ட் புரோகிராம் திட்டம் தான் இந்தியாவின் முதல் இதயநோய்த்தடுப்புத் திட்டமாகும்.

ஆதாரப்பூர்மான அறிவியல் அடிப்படையிலான இந்தத்திட்டம் ஒவ்வொரு தனிநபரும் ஆபத்துக்காரணிகளைக் கண்டறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை நோக்கிச் செல்லலாம்.

சென்னை அப்பல்லோமருத்துவமனையின் இதயநோய் சிகிச்சைப்பிரிவின் பயணம்: 1983-ம்ஆண்டுஅப்பல்லோ மருத்துவமனை தொடங்கப்பட்ட 1983-ல் இருந்தே இதய நோய் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஏட்ரியல்செப்டல் பாதிப்பிற்காக முதல் இதய அறுவைசிகிச்சை அப்பல்லோவில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனை, பல்வேறு வகையான இதயநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த மருதத்துவனையாகத் திகழ்கிறது. 

இதய நோய் மற்றும் இதய ரத்த நாள அறுவைசிகிச்சைப்பிரிவில் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நடைமுறைகளைப்பின் பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு நோயாளிகளுக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீட்டிங் ஹார்ட்சர்ஜரி எனப்படும் இதயம் துடிக்கும் போதே மேற்கொள்ளப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையை அப்பல்லோ மருத்துவனை 1997-ம் ஆண்டு தொடங்கியது. 


இதுவரை அப்பல்லோ மருத்துவமனையில் 22, 300 பீட்டிங்ஹார்ட் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கரோனரி ஆர்டரிபைபாஸ்கிராஃப்டிங் (சிஏபிஜி) தொடர் நடைமுறையை இது மாற்றி அமைத்துள்ளது. சென்னை கிரீம்ஸ்சாலை அப்பல்லோ மருத்துவமனை, செல்வி லாண்ட்கிளினிக்குக்கு சமமாக சிறப்பாக செயல்பட்டு இறப்புவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு முன்னோடி நடவடிக்கையாக ஆர்டெரியல் கிராஃப்டிங் உள்ளிட்ட “லிமா – ரிமா” ஒய்கிராஃப்டிங் அப்பல்லோவில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இளம் நோயாளிகளுக்கு பீட்டிங் ஹார்ட் சர்ஜெரி இந்த முறையின் மூலம் செய்யப்படுகிறது. 

2007-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் குறைந்த ஊடுருவல் கொண்ட இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வால்வு மாற்று சிகிச்சை, வயது வந்தோரில் பிறவி இதயநேயாளிகளாக உள்ளவர்கள் மற்றும் சிங்கிள் வெஸல்பைபாஸ்கிராஃப்டிங், ஆகியவை தோலில் 6 சென்டிமீட்டர் அளவுக்கு சிறிய துளையிட்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த குறைந்த ஊடுவல் சிகிச்சை நடைமுறை ரோபோ உதவியுடனும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிய அசெண்டிங் ஆரோடிக் அனியூரிசம்ரிப்பேர் (பிரதான ரத்தக்குழாயில் அசாதாரண முறையில் பெரிதாவது) நோய்க்கு ஆரோடிக் வால்வுரீப்ளேஸ் மென்ட் குறைந்த ஊடுருவல் கொண்ட சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.