சுவாசிக்கும் அறிவிப்புப் பலகை - The Billboard that Breathes

சுவாசிக்கும் அறிவிப்புப் பலகை - The Billboard that Breathes

வாகன உமிழ்வு, கட்டுமான மாசு, சாலை தூசி மற்றும் பிற வாயு மாசுபாடுகள் உங்கள் நுரையீரலுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன் முயற்சியான “சுவாசிக்கும் அறிவிப்புப் பலகை” (The Billboard that Breathes) மூலம் நமது வளிமண்டலம் மாசுபடுத்துவதால் ஏற்படும் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் மற்றும் ஆபத்து குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. அப்பல்லோ புற்றுநோய் மையத்தில் ராட்சத அளவலான செயற்கை வெள்ளை நுரையீரல்கள் நிறுவப்பட்டுள்ளன. நமது நுரையீரல்களைப் போலவே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட அவற்றின் மூலம், சுற்றுச் சூழல் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக விளக்கப்படுகிறது. மாசு அதிகம் ஆகும்போது இறுதியில் அந்த வெள்ளை நுரையீரல் முற்றிலும் கருப்பு நிறமாக மாறுவதைக் காண முடியும். காற்றின் தரக் குறியீட்டு எண் அடுத்தடுத்த நாட்களில் கீழே உள்ளவாறு இருந்தது. சராசரியாக காற்றின் தரக் குறியீடு 141 ஆக பதிவானது.

 இது காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையின் செயல்திட்ட மாதத்தின் ஒரு பகுதியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை மேற்கொண்டுள்ள முன்முயற்சியாகும். இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா -சிஏஜி) மற்றும் Jhatkaa.org. (ஜாட்கா.ஆர்க்) என்ற சுற்றுச் சூழல் மாசுத் தடுப்பு பிரசார இயக்க நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து அப்பல்லோ மருத்துவமனை இந்த முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சுவாசிக்கும் அறிவிப்புப் பலகை ('பில்போர்டு தட் ப்ரீத்ஸ்' என்பது ஒரு தனித்துவமான நிறுவல் ஆகும். இது மனித நுரையீரலை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உயர் திறன் கொண்ட துகள் காற்று (High-efficiency particulate air -HEPA filter), வடிப்பான்களுடன் இது வடிவமைக்கப்பட்டதாகும். அத்துடன் சுவாசத்தை பிரதிபலிக்கும் விசிறி, காற்று மாசுபாட்டின் தாக்கத்தை தெளிவாக எடுத்துரைக்கும். நாள்தோறும் மாசுபட்ட காற்றை சுவாசிக்கும்போது சாம்பல் வண்ணத்தில் அந்த நுரையீரல் மாறுவதைக் காணலாம்.

கால நிலை அல்லது பருவ நிலை மாற்றம் மற்றும் சூழல் மாசுபாட்டால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைப்பது, அதன் மீது கவனம் செலுத்துவது, அதை நிவர்த்தி செய்வதற்கு தனிப்பட்ட மற்றும் கூட்டு முயற்சி அடிப்படையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது ஆகியவைதான் இந்த ஒரு மாத கால நிகழ்வின் நோக்கம் ஆகும்.

மாசுபட்ட காற்று கார்டியோ-வாஸ்குலர் எனப்படும் இதய ரத்தநாள ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. இது தவிர, மாசுபட்ட காற்று நுரையீரல் புற்றுநோய் மற்றும் வாய் தொடர்புடைய பிற புற்றுநோய்களுக்கு ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. “2013-ம் ஆண்டில், புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆர்சி) வெளிப்புற காற்று மாசுபாடு புற்றுநோய்க்கு ஒரு காரணம் என்பதை உறுதிப்படுத்தியது. ஒரு மீட்டர் அகலத்தின் மில்லியன்கணக்கான சிறிய தூசி போன்ற துகள்கள், ‘துகள் பொருள்’ (‘particulate matter- PM )என அழைக்கப்படுகின்றன. இது வெளிப்புற காற்று மாசுபாட்டின் ஒரு பகுதியாகும். பிஎம் 10 (PM10) மற்றும் பிஎம் 2.5 (PM2.5) என அழைக்கப்படும் மிகச்சிறிய துகள்கள், காற்று மாசுபாட்டால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய்களுடன் தொடர்புடையவையாக உள்ளன.” என்று இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பான கேன்சர் ரிசர்ச் யூகே கூறுகிறது. உலகளவில் ஏற்படக் கூடிய சுமார் 4.2 மில்லியன் முன்கூட்டிய மரணங்கள் சுற்றுப்புற காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கை மதிப்பிடுகிறது, முக்கியமாக இதய நோய், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் ஆகியவை காரணமாக இது போன்ற மரணங்கள் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

   சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் போன்ற வேதிப்பொருட்களின் சிக்கலான எதிர்விளைவுகளின் காரணமாக பெரும்பாலான துகள்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அவை அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் மாசுபாடுகள் ஆகும். இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளதன் ஒரு பகுதியாக பர்டிகுலேட் மேட்டர் எனப்படும் பிஎம் (PM) நிலைகள் கண்காணிக்கப்பட்டு, அவ்வப்போதைய பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுத் தெரியப்படுத்தப்படும்.

தேத               காற்றின் தரக் குறியீடு

15 பிப்ரவரி 2020   141

21 பிப்  2020       157

23 பிப் 2020        180

27  பிப் 2020       181