மதுக்கடை உரிமையாளரின் அதிரடி ஐடியா

மதுக்கடை உரிமையாளரின் அதிரடி ஐடியா
Amazing idea by Kerala bar owner to beat SC order

திருவனந்தபுரம்: நாளுக்கு நாள் பெருகி வரும் சாலை விபத்திற்கு போதையில் வாகனத்தை ஓட்டுவதே மூலக்காரணம் என்று கருதிய சில தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் இருக்கும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்திரவின் பேரில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மதுக்கடைகள், நட்சத்திர ஓட்டல்களில் இருந்த பார்கள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன.

ஆனால், கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பரவூரை சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள "ஐஷ்வர்யா ரெஸ்ட்டோபார்" என்ற மது விடுதியின் உரிமையாளர் தனக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்தி, மதுக்கடையை அப்படியே பின்நோக்கி நகர்த்தி சென்றிருக்கிறார்.

பழைய கடையின் நுழைவு வாசலில் இருந்து குறுக்கும் நெடுக்குமாக சிமெண்ட் சிலாப் தடுப்புகளை அமைத்து, சுமார் 300 மீட்டர் தூரத்தில் பின்நோக்கி புதிய கடையை அவர் அமைத்துள்ளார்.

இதன் மூலம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தையும் கடந்து தன் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த மதுக்கடையை தடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதன் மூலம் தன்னுடைய வழக்கமான வாடிக்கையாளர்கள் எப்போதும் போல் தன் கடையை முற்றுகையிட்டு வருவதாக அந்த கடையின் உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Amazing idea by Kerala bar owner to beat SC order