விமானத்தில் அத்துமீறி நடந்துகொண்டால் ரூ.15 லட்சம் அபராதம்

விமானத்தில் அத்துமீறி நடந்துகொண்டால் ரூ.15 லட்சம் அபராதம்
Air india to fine unruly passenger upto Rs 15 lakhs

புது டெல்லி: விமானத்தில் அத்துமீறி நடந்துக்கொள்ளும் பயணிகளுக்கு ரூ.15 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய முடிவை எடுத்துள்ளதாக எர் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பயணிகள் தகராறு செய்வதால் அடிக்கடி விமான சேவையில் காலதாமதம் ஏற்படுகிறது, இதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பயணியின் தகராறு காரணமாக விமான சேவையில் ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால் 5 லட்ச ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதம் ஆனால் 10 லட்ச ரூபாயும், 2 மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் ஆனால் 15 லட்ச ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், "எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஏர் இந்தியா ஊழியர்கள் நேரடியாக ஊடகங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கக்கூடாது என்றும், உடனடியாக காவல்துறையின் மூலமாகவே புகார் அளிக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளது.

Air india to fine unruly passenger upto Rs 15 lakhs